திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி கொய்யா சந்தையில் தலித் விவசாயிகள் மீது பழனி வருவாய்த் துறையினரால் போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறக் கோரி ஆயக்குடி விவசாயிகளுக்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனின் விடுதலை சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றன..
ஆயக்குடியில் உள்ள தலித் விவசாயிகள் நிலத்தில் சில ஆண்டுகளாக வருவாய் துறை அதிகாரிகள் துணையோடு மண் கடத்திச் செல்லும் மாஃபியா கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலித் விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்கை வருவாய்த்துறையினர் திரும்ப பெற வேண்டும்.
சம்பத்தப்பட்ட அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் தலைமையில் விவசாயிகள் மீது மண் திருடியதாக பொய் வழக்கு பதிவு செய்து கோட்டாட்சியர் மூலம் மூன்று கோடி 40 லட்சத்துக்கு
மேல் நஷ்டஈடு போடப்பட்டதை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடர் காத்திருக்க போராட்டம் நடைபெற்றன.
போராட்டத்தின் தலைமையாக பன்னீர்செல்வம் முன்னிலையாக மயில்சாமி போராட்டத்தை மாவட்ட செயலாளர் முருகேசன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து போராட்டத்தின் சிறப்புரையாக மாவட்ட நிலை குழு மதியழகன் மாநில குழு சபரி மாநில குழு மீனாட்சி சுந்தரம் முன்னிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றன..
