திருநெல்வேலி வள்ளியூரில், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, ஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய, சபாநாயகர் அப்பாவு!
திருநெல்வேலி,நவ.5:- நெல்லை மாவட்டத்தில், பாளையங்கோட்டை, நாங்குநேரி,வள்ளியூர், ராதாபுரம், களக்காடு, சேரன்மகாதேவி ஆகிய, ஆறு ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த, 831 ஊரக குடியிருப்புகளுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிடும் பொருட்டு, 605 கோடி ரூபாய் மதிப்பில், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள், தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகினறன. இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து, இன்று (நவம்பர்.5) காலையில், வள்ளியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், “மாவட்ட ஆட்சித்தலைவர்” டாக்டர்.இரா. சுகுமார் தலைமையில், “தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர்” (சபாநாயகர்) மு.அப்பாவு,…
