தி.மு.க தலைமைக் கழகம் கட்சியின் மூத்த தலைவர் பொன்முடியை துணைப் பொதுச் செயலாளராக நியமித்துள்ளது.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் பொன்முடி, கடந்த ஏப்ரல் மாதம் விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பொன்முடி, பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் சமய நம்பிக்கைகளை அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பெண்களுக்கான இலவச பேருந்து, குறிப்பிட்ட சாதி குறித்து பேசியது என இவரது பல பேச்சுக்கள் பேசு பொருளானது. இதனையடுத்து பொன்முடிக்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், கட்சியின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்த சில மாதங்களில் அமைச்சர் பதவியும்…
