மத்திய பா.ஜ.க அரசின் அழுத்தத்தில் செயல்படுகிறது என்று கூறப்படும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள SIR தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை கண்டித்து, நீலகிரி மாவட்ட திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் உதகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…
உதகை: உதகை ஏ.டி.சி ஜீப் நிறுத்தம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே. எம். ராஜூ அவர்கள் தலைமையில் நடத்தினார். இந்நிகழ்ச்சியில் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு. முபாரக், கூடலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் பரமேஸ்குமார், தோழமை கட்சிகள் நிர்வாகிகள், மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள் கூறியதாவது: “மத்திய பா.ஜ.க அரசின் திட்டமிட்ட அரசியல் முறைகேட்டின் கீழ்,…
