உலக தமிழர்களின் பார்வைக்கு விரைவில் வருகிறது! நெல்லையில் 67 கோடி ரூபாய் மதிப்பில் அமையும் பொருநை அருங்காட்சியகம்! டிசம்பரில் முதல்வர் திறந்து வைக்கிறார்! தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திருநெல்வேலியில் பேட்டி!
திருநெல்வேலி,டிச.1:- தமிழக நிதி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இன்று ( டிசம்பர்.1) திருநெல்வேலியில், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-“தமிழர்களின் தொன்மை நாகரிகத்தை, உலகிற்கு பறைசாற்றும் வகையில், திருநெல்வேலியில் மொத்தம் 67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும், “பொருநை அருங்காட்சியகம்” பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து விட்டன இந்த மாதம் (டிசம்பர்) “முதலமைச்சர்” மு.க.ஸ்டாலின் இதனை திறந்து வைக்கிறார்.தமிழ் பெருங்குடி மக்களின் தொன்மை நாகரிகத்தை, உலகிற்கு பறைசாற்றும்…
