Headlines
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் பழுது: பயணிகள் அவதி

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் பழுது: பயணிகள் அவதி.

நாகர்கோவில், பிப்ரவரி 11: நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக எஸ்கலேட்டர் (நகரும் படிக்கட்டு) வசதி முடங்கியுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, வழக்கமாக ஒன்றாவது நடைமேடையில் வரும் சென்னை – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த சில நாட்களாக மூன்றாவது நடைமேடைக்கு மாற்றப்பட்டதால், முதியவர்களும், அதிக உடைமைகளுடன் வருவோரும் படிக்கட்டுகள் வழியாக மேலே ஏறிச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதனால் வேறு வழியின்றிப் பயணிகள் போர்ட்டர்களை நாட வேண்டிய கட்டாயத்திற்குத்…

Read More
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் மருத்துவ சாதனை

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் மருத்துவ சாதனை

கட்டி பாதிப்பால் செயலிழந்த வாலிபரின் கை மீட்பு – பல மணி நேர அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் வெற்றி. கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கட்டி பாதிப்பால் செயலிழந்த வாலிபரின் கையை அரசு மருத்துவமனையில் முதல்முறையாக பல மணி நேரம் போராடி மேற்கொண்ட சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர். டாக்டர் நோபிள் தலைமையிலான மருத்துவக் குழு, நவீன மருத்துவ முறைகளை பயன்படுத்தி இந்த அரிய சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றியது. இந்த…

Read More
மறவன்குடியிருப்பு தேவாலய பங்கு பேரவையில் பல கோடி முறைகேடு குற்றச்சாட்டு – மக்கள் போராட்டம், போலீஸ் குவிப்பு

மறவன்குடியிருப்பு தேவாலய பங்கு பேரவையில் பல கோடி முறைகேடு குற்றச்சாட்டு – மக்கள் போராட்டம், போலீஸ் குவிப்பு.

மறவன்குடியிருப்பு பகுதியில் உள்ள புனித தஸ்நேவிஸ் மாதா தேவாலய பங்கு பேரவையில் பல கோடி ரூபாய் நிதி மற்றும் சொத்து முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, ஊர் மக்கள் மற்றும் பக்தர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் வழங்கிய நன்கொடைத் தொகைகள் மற்றும் சொத்துக்கள் பங்கு பேரவையின் அதிகாரப்பூர்வ கணக்கில் சேர்க்கப்படாமல், தனியாக தொடங்கப்பட்ட டிரஸ்ட் மூலம் வரவு வைக்கப்பட்டு முறைகேடு செய்யப்பட்டதாக நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க…

Read More
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு திட்டம் விரிவாக்கம் — நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கல்

தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு திட்டம் விரிவாக்கம் — நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கல்.

நாகர்கோவில், பிப். 9: முதலமைச்சர் தொடங்கிய திட்டம் பேரூராட்சிகளுக்கும் விரிவு; கன்னியாகுமரியில் 3,200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பயன்பெற்றனர். தமிழ்நாடு அரசின் தூய்மை பணியாளர்களுக்கான 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் தெரிவித்தார். ஏழை, எளியோரின் பசியை போக்கும் நோக்கில் செயல்படும் அரசு இதுவென அவர் பெருமிதம் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் தொடங்கி வைத்த திட்ட விரிவாக்கத்தைத் தொடர்ந்து,…

Read More
மதம் மாறிய கிறிஸ்தவர்” குறிப்பு : சாதி சான்றிதழ் மாற்றத்திற்கு எதிர்ப்பு - கன்னியாகுமரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதம் மாறிய கிறிஸ்தவர்” குறிப்பு :சாதி சான்றிதழ் மாற்றத்திற்கு எதிர்ப்பு – கன்னியாகுமரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி, பிப் 7 : கன்னியாகுமரி மாவட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், கிறிஸ்தவ சம்பவர் சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட சாதி சான்றிதழ்களில் 2013 ஆம் ஆண்டு முதல் சாதி குறிப்பு பகுதியில் “மதம் மாறிய கிறிஸ்தவர்” என பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த வகையான சாதி குறிப்பு மாற்றம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் சமூகத்தினரிடையே நிலவி வருவதாகவும், இதுகுறித்து மாவட்ட…

Read More
குமரி குளங்களில் ரவுடிகள் ராஜ்ஜியம்: தாமரைப் பூ பறிக்க ரூ.5 லட்சம் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் — அதிகாரிகள் மெத்தனப்போக்கா?

குமரி குளங்களில் ரவுடிகள் ராஜ்ஜியம்: தாமரைப் பூ பறிக்க ரூ.5 லட்சம் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் — அதிகாரிகள் மெத்தனப்போக்கா?

கன்னியாகுமரி, பிப்ரவரி 6: கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறைக்கு சொந்தமான குளங்களில் தாமரைப் பூ பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் ஏழைத் தொழிலாளர்களை ரவுடிக் கும்பல் மிரட்டி, லட்சக்கணக்கில் பணம் பறிப்பதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் தேரேகால்புதூரைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர், தேரூர் மாணிக்கபுத்தேரி குளத்தில் தாமரைப் பூ பறித்து தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். கடந்த ஆறு மாதங்களாக, சிறையில் உள்ள தண்டனை கைதிகளின் தூண்டுதலின் பேரில், இளங்கடை புத்தன்குடியிருப்பைச்…

Read More
கட்டுமானப் பணி சுணக்கம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு!

கட்டுமானப் பணி சுணக்கம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு!

பத்துகாணி,ஜனவரி 30: கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி பகுதியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் இயங்கி வந்த பழைய மருத்துவமனைக் கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, அதனை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இருப்பினும், இந்தப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அழுத்தம் கொடுக்கும் காலங்களில் மட்டும் பணிகள்…

Read More
இளங்கடை கச்சேரி சாலை: டிப்பர் லாரிகளின் அட்டகாசம் — மக்கள் அவதி

இளங்கடை கச்சேரி சாலை: டிப்பர் லாரிகளின் அட்டகாசம் — மக்கள் அவதி

குடியிருப்பு பகுதி சாலை கனரக வாகனங்களால் சேதம் இருபுறமும் வீடுகள் நிறைந்த குடியிருப்பு பகுதியாக உள்ள இளங்கடை கச்சேரி சாலை, பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக தார் சாலையாக அமைக்கப்பட்டது. முன்பு கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் மட்டுமே இயங்கிய இந்த சாலையில், கடந்த சில மாதங்களாக டாரஸ் மற்றும் டிப்பர் லாரிகளின் தொடர்ச்சியான போக்குவரத்து அதிகரித்துள்ளது. அதிகாலை முதல் இரவு வரை லாரி ஊர்வலம் அதிகாலை நேரத்திலேயே தொடங்கும் லாரி போக்குவரத்து, நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களை…

Read More
கன்னியாகுமரியில் ஆட்டோக்களில் அதிமுக தேர்தல் விழிப்புணர்வு இயக்கம் துவக்கம்

கன்னியாகுமரியில் ஆட்டோக்களில் அதிமுக தேர்தல் விழிப்புணர்வு இயக்கம் துவக்கம்.

நாகர்கோவில், சன 29: வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் சிறப்புத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஃப்ளெக்ஸ் ஒட்டும் இயக்கம் தொடங்கப்பட்டது. முக்கிய திட்டங்கள் மக்கள் மத்தியில் அதிமுக பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்த திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். அவற்றில்:…

Read More
ஜீவ சமாதியான குடிநீர் கிணறு… ஜொலிக்கும் விளக்குகளுக்கு நடுவே தாகத்தில் தவிக்கும் மக்கள்!

ஜீவ சமாதியான குடிநீர் கிணறு… ஜொலிக்கும் விளக்குகளுக்கு நடுவே தாகத்தில் தவிக்கும் மக்கள்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 3-வது வார்டு மேல பெருவிளை பகுதியில் பொதுமக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்த பழமையான கிணறு, “புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்படும்” என்ற வாக்குறுதியுடன் அதிகாரிகளால் மண்ணால் மூடப்பட்டு, இன்று ஜீவ சமாதியாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேறாமல் மாதங்கள் கடந்தும் புதிய குடிநீர் வசதி ஏற்படுத்தப்படாததால், அப்பகுதி மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வருகின்றனர். வீட்டு குடிநீர் இணைப்புகள் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்ற குடிநீர்…

Read More