இதழ்கள்
மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பத் திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.
மதுரையில் கூடல்அழகர் பெருமாள் கோவில் 108 திவ்ய தரிசனங்களில் ஒன்றாக விளங்குகிறது இத்திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது கூடல் அழகர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான டவுன் ஹால் ரோடு பகுதியில் உள்ள தெப்பத்தில் இன்று தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது . இந்த தெப்ப திருவிழாவில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் மதுரை டவுன் ரோடு பகுதியில் உள்ள வியாபாரிகள் சார்பில் சிறப்பு பூஜைகளும் ,அன்னதானமும் நடைபெற்றது . தெப்பத் திருவிழாவில் வியாபாரிகள் சார்பில்…
தமிழ்நாடு அச்சு ஊடக உரிமையாளர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்.
கோவை ஆட்சியர்அலுவலகம் அருகில் உள்ள bsnl அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அச்சு ஊடக உரிமையாளர் சங்கத்தின் சார்பாக கோவை மாவட்ட செய்தி, மக்கள் தொடர்பு அதிகாரி, அவர்கள், அவர்களுக்கு, தேவையான சில பத்திரிகையாளர்களை ஆதரித்தும் மற்ற பத்திரிக்கையாளர் அனைவரையும், புறக்கணிப்பதை, கண்டித்தும், இதைக் கண்டும் காணாமல் இருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை கண்டித்தும் அனைத்து தினசரி மாதம் வாரம் வரும் இதழ்களின் பத்திரிகையாளர்களுக்கு, ஒன்றியஅரசு வழங்க அறிவுறுத்தியுள்ள, பஸ் பாஸ் உள்ளிட்ட சிறப்பு சலுகைகள். பஸ்…
மாவட்ட செயலாளருக்கு நகர செயலாளர் பச்சைக்கொடி.
திமுக பழனி நகர செயலாளர் வேலுமணி பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமாருக்கு சென்னை அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்தார். பழனியில் மீண்டும் பழனி சட்டமன்ற உறுப்பினரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் ஐ.பி.செந்தில்குமார் போட்டியிட மாட்டார், திண்டுக்கல்லில் போட்டியிடுவார் என்றும் பழனியில் வேலுமணி போட்டியிடுவார் என்று பழனி அரசியலில் உலவி வந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது இந்நிகழ்வு.
எமரால்டு பஜாரில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் திறப்பு விழா..
நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பால் கொள்முதல் நிலையம் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்தது. இதற்கு நிரந்தரமாக சொந்த கட்டிடம் வேண்டுமென்று எமரால்டு சுற்றுவட்டாரப் பொதுமக்கள் பல்வேறு தரப்பட்ட கோரிக்கைகளை தமிழக அரசுக்கு கொடுத்து வந்தனர். இந்நிலையில் நீலகிரி மாவட்ட உதகை சட்டமன்ற உறுப்பினர் திரு கணேசன் அவர்களின் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் பால் கொள்முதல் நிலையத்திற்கு தனியாக கட்டணம் கட்டப்பட்டது. இந்த…
எமரால்டு பகுதியில் தமிழக முதல்வரின் 73 வது பிறந்தநாள் விழா..
நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் 73 வது பிறந்த தின விழா இன்று நீலகிரி மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு உமாராஜன் அவர்கள் தலைமையில் சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சுற்றுவட்டார பொதுமக்களும் திமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இவ்விழாவினை சிவக்குமார் (சின்னவர்) மற்றும் அம்சத் ஆகிய…
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இன்று மாலை பிரதமர் சாமி தரிசனம்…பாதுகாப்பு வளையத்தில் திருப்பரங்குன்றம் முருகன் கோயில்..
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி இன்று மாலை சாமி தரிசனம் செய்ய உள்ளதால் கோயில் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப் பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் இருந்து அவனியாபுரம் வழியாக கோயிலுக்கு வரும் பிரதமர் மோடி மாலை 4 மணிக்கு சாமி தரிசனம் செய்ய உள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக கோயில் அருகே திறந்து இருக்கும் அனைத்து கடைகளையும் மதியம் 12 மணிக்குள் அடைக்க போலீசார் உத்தரவிட்டுள்ளனர். தென் மண்டல செய்தியாளர்: சின்னத்தம்பி
STAR GURU CHARITABLE FOUNDATION சார்பாக, மதுரை நேரு வித்தியாசாலை மேல்நிலைப்பள்ளியில் 78வது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் திரு. குருசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பல மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மாணவர்களின் முன்னிலையில் குருசாமி அவர்கள் ஊக்கமளிக்கும் உரை நிகழ்த்தி, கல்வியின் முக்கியத்துவம் மற்றும் நல்ல ஒழுக்கத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். தொடர்ந்து திறமையான மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினர். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்புடன் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த விழா அனைவருக்கும் ஊக்கமும் மகிழ்ச்சியும் அளித்தது. மதுரை மாவட்ட…
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட சின்ன உடைப்பு பகுதி மக்கள், இன்னும் இரண்டு வாரங்களுக்குள் தங்கள் இடங்களை காலி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுமார் 350 குடும்பங்கள் வசித்து வரும் இந்தப் பகுதியில், நிலத்திற்கான இழப்பீடு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்ட போதிலும், முறையான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் கூறி மக்கள் வெளியேற மறுத்து வந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, “அரசு ஏற்கனவே பெருங்குடியில் 2 செண்ட் நிலமும், ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடும் கட்டித் தர முன்வந்துள்ள நிலையில், மக்கள் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவது முறையல்ல”…
புதிய நியாய விலைக் கடை திறப்பு விழா.
ஊட்டி பிப்ரவரி நீலகிரி மாவட்டம், உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர். கணேஷ் எம் .எல். ஏ அவர்களின் தொகுதி மேம்பாடு நிதியின் கீழ் (2024 -2025) 27 வது வார்டு தீட்டுக்கல் பகுதியில் நியாய விலை கடை கட்டப்பட்டது. இப்பகுதி பொதுமக்கள் கடந்த ஐம்பது ஆண்டு காலமாக மூன்று நான்கு கிலோ மீட்டர் தூரம் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வந்தார்கள். இப்பிரச்சினைக்கு தீர்வு காண 27ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் திருமதி. ஆர். ஜெயலட்சுமி…
நாகர்கோவில் : காயமடைந்த அரிய வகை ‘கூகை’ ஆந்தை மீட்பு, இரவிலும் விரைந்தோடிய வனத்துறையினர்!
கன்னியாகுமரி, பிப் 25 : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார், சின்ன அரிப்புத் தெரு பகுதியில் காயமடைந்து பறக்க முடியாமல் தவித்த அரிய வகை கூகை (Barn Owl) ஆந்தையை பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். இப்பகுதியில் இரவு 11 மணி அளவில் அடிபட்டு சோர்வாகக் கிடந்த இந்தப் பறவையைப் பார்த்த பொதுமக்கள், உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். பூதப்பாண்டி வன சரக அலுவலர் அன்பழகன் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர் ராஜன் மற்றும்…
