இதழ்கள்
தேர்தல் 2026 இலட்சினை (Icon) அறிமுக விழா
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் சட்டமன்ற பொது தேர்தலை 2026ஐ முன்னிட்டு தேர்தல் Icon இருவாச்சி பறவை (hornbil) வடிவமைப்பில் அமைக்கப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் அறிமுகப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கோவைமாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்
பழனி பெருநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
பழனி நகராட்சி ஆண்கள் பள்ளி வளாகத்தில் செயல்படும் அறிவுசார் ஆற்றல் மையத்தில் மகளிருக்கான கழிப்பறையில் கதவுகள் உடைந்து பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் அங்கு படிக்க வரும் கிராமப்புற மாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? பழனி நிருபர் நா.ராஜாமணி.
ஜப்பானை சேர்ந்த முருக பக்தர்களின் வேல் தீர்த்த யாத்திரை, பழனியில் புலிப்பாணி சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் ஜப்பானை சேர்ந்த முருக பக்தர்களின் வேல் தீர்த்த யாத்திரை நடைபெற்றது. முன்னதாக இந்நிகழ்வில் ஜப்பானை சேர்ந்த 50 முருக பக்தர்கள் புலிப்பாணி ஆசிரமத்தில் இருந்து பால்குடம் ஏந்தியவாறு யாத்திரியை தொடங்கி, திரு ஆவினன்குடி முருகனை தரிசித்து பாலபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மாலை வேலையில் நடைபெற்ற தேர் திருவிழாவில் தேர் இழுத்து மாரியம்மனுக்கு நடைபெறும் மாசி திருவிழாவில் தேர் இழுத்து தீச்சட்டி…
“ தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரை நிகழ்வு…
நேற்று(24.02.26)கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திரு,துரை.செந்தமிழ் செல்வன் தலைமையில்,நடைபெற்ற “தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரை நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர், Dr.கனிமொழி என்.வி.என்.சோமு அவர்கள், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஐயா மகாத்மா காந்தி, நஞ்சுண்டாபுரம் பகுதியில் பேரறிஞர் அண்ணா, சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஐயா தியாகி.என்.ஜி. ராமசாமி, ஒண்டிப்புதூர் பகுதியில் கர்மவீரர் காமராஜர் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பகுதி கழக செயலாளர்கள் திரு,எஸ். எம். சாமி, திரு,ம….
வெற்றி அறக்கட்டளை நிலவன் டிவி இணைந்து வழங்கும் நலத்திட்ட உதவிகள் மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது…
மதுரை பெரியார் பஸ் நிலையம் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை அருகில் யூசி பள்ளியில் நடைபெற்ற வெற்றி அறக்கட்டளை நிலவன் டிவி இணைந்து வழங்கிய நலத்திட்ட உதவிகள் மற்றும் விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஸ்டார் பிரண்ட்ஸ்அறக்கட்டளை நிறுவனர், டி.குருசாமி தலைமையில் நடைபெற்றது. இடை காட்டூர் பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாகர் முன்னிலை வகித்தார் மற்றும் கட்சி பிரதிநிதிகள், காவல்துறை ஆய்வாளர்கள் ,வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள், கலந்து கொண்டு சமூக ஆர்வலர்களுக்கான விருது மக்கள் நலப்பணி விருது மற்றும்…
முதல்வர் வருகையும் முக்காடு போடும் காலி மனைகளும்: குமரியில் ‘மோடி மாடலை’ கையில் எடுத்த திராவிட மாடல்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை தரவுள்ள நிலையில், அவரை வரவேற்க நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் செய்துள்ள ஒரு ‘பிரம்மாண்ட’ ஏற்பாடே தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. முதல்வரின் பயண வழித்தடங்களில் உள்ள தனியார் காலி மனைகளைத் தேடிப்பிடித்து, ஆளுயரத் திரைகளால் மூடும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குஜராத் மாநிலத்துக்கு வந்தபோதும், 2023…
கல்விக்குக் கரம்கொடுக்கும் திராவிட மாடல் அரசு.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் உள்ள செல்வபுரம் மாநகராட்சிப் பள்ளியில் ரூ.96 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் திறப்பு விழா! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில், “இல்லம் தேடி கல்வி” முதல் “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” வரை கல்வித்துறையில் தமிழகம் ஒரு பொற்கால ஆட்சியைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில், கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட 80-வது வார்டு செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கல்வி மேம்பாட்டிற்காக ஒரு முக்கிய…
அரசு சுவற்றில் அரசியல் விளம்பரம் செய்யும் த.வெ.க.!
#பழனி சட்டமன்ற தேர்தலையொட்டி தவெக கட்சியினருக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி பேருந்து நிலையத்தில் பெருநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் த.வெ.கவினர் விசில் சின்னம் வரைந்துள்ளனர். அரசு சுவற்றில் சுவர் விளம்பரம் செய்யாதீர் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அறிவிப்பை பொருட்படுத்தாமல் நமது சின்னம் விசில் என்ற முத்திரையை அச்சிட்டு விதிமுறைகளை த.வெ.கவினர் மீறியதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதுசம்பந்தமாக பழனி…
கோட்டார்–மணக்குடி சாலை அவசர திருத்தம் : மாவட்ட நிர்வாகத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான் கண்டனம்.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பல சாலைகள் குண்டும் குழியுமாக இருந்து, கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தினமும் அவதியுறுகின்றனர். இந்த நிலைமை குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், குறிப்பாக மாவட்ட ஆட்சியருக்கும் தெரியாதா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் அலட்சியம் காட்டப்படுகிறதா? என மனிதநேய ஜனநாயக கட்சி கேள்வி எழுப்புகிறது. தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, முதலமைச்சர் பயணம்…
அதிமுக அரசின் அல்லி ராணியான கோமளவள்ளியின் மூடநம்பிக்கை!…
தமிழ்நாட்டை ஆண்டுவிட்டுப்போன அதிமுக அரசின் அல்லி ராணியான கோமளவள்ளியின் மூடநம்பிக்கையான செயலுக்காய், நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை..மனித உயிர்களை படுகொலை செய்த வரலாற்று துக்கத்தை..கருப்பு நாளைப்பற்றி பேசியே ஆகவேண்டும் இன்று. 18.02.1992. கால் நூற்றாண்டுக்கு முன், இதே தேதியில்.. கும்பகோணம் கும்பேசுவரர் கோவிலில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகம் விழா. கோவிலின் குளத்தில் நீராடினால் பாவங்கள் விலகுமென்று திரண்டுவந்த மக்களுக்கு..தங்களில் நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு அதுதான் இறுதி நாளென்பது தெரியாது. ராஜீவ் படுகொலை தந்த பரிசால் ..முதன்முறையாக…
