இதழ்கள்
நாகர்கோவிலில் வருவாய்த்துறையினர் சாலை மறியல்: பெண்கள் உட்பட 200 பேர் கைது..!
நாகர்கோவில், மார்ச் 05: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களுக்குப் பணிப் பாதுகாப்பு சட்டம் இயற்றக் கோரி ஊர்வலமாக வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். நில அளவைப் பணிகளின் போதும், மணல் கொள்ளையைத் தடுக்கும் நடவடிக்கைகளின் போதும் அதிகாரிகளுக்கு விடுக்கப்படும் தொடர் மிரட்டல்களைத் தடுக்க அரசு தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் எனவும், கிராம உதவியாளர்களுக்குக் காலமுறை ஊதியத்துடன் மேம்படுத்தப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள்…
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை நிறைவேற்றததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை:
மலை உச்சியில் பூஜை செய்ய நீதிமன்றம் கூறும் 5 பேரை அனுமதிக்க வேண்டும் என்ற முந்தைய விசாரணை உத்தரவு குறித்து ஆலோசித்து வருவதாக அரசுத் தரப்பு பதில். புதிய வழிபாடுகளை நடைமுறைப்படுத்துவது குறித்து அறங்காவலர்கள் ஆலோசனைதான் கூற முடியும்; முடிவு எடுக்க முடியாது என கோயில் தரப்பில் வாதம்.. எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்று கேட்டுச் சொல்லுங்கள்? நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து எத்தனை மாதம் ஆனது? என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி.? உச்சிப் பிள்ளையார் கோவிலில் தான் கார்த்திகை…
மதுரையில் மகிழ்ச்சி மற்றும் வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.
தீமையை நன்மை வென்றதை நினைவு கூறும் வகையில் ஹோலி பண்டிகையை இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகள் மற்றும் வண்ண நீர் ஊற்றியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். மதுரையில் வட மாநில இளைஞர்கள் மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள அன்னக்கிளி மண்ட பகுதியில் உள்ள தமிழ் இளைஞர்கள் வண்ணப்பொடி பூசி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். “தமிழர்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல இந்தி மொழி திணிப்புக்கு எதிரானவர் தான்” என்று பராசக்தி…
இஸ்ரேல்–அமெரிக்காவுக்கு எதிராக மஜக கண்டனம்! நாகர்கோவில் கோட்டாரில் மாபெரும் ஆர்ப்பாட்டம்…!
நாகர்கோவில், மார்ச் 3: கன்னியாகுமரி மாவட்ட மனிதநேய ஜனநாயகக் கட்சி (மஜக) சார்பில் இஸ்ரேல்–அமெரிக்க அரசுகளுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அறிவுறுத்தலின்படி, நாகர்கோவில் கோட்டார் அப்துல் காதர் மருத்துவமனை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட…
கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்பமனு வழங்கல்.
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சி 2026-ல் மீண்டும் தொடர்ந்திட கழகத்தின் இளம் தலைவர், இளைஞரணிச் செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நல்ஆசியுடனும், கோவை மாநகர் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளரும், கோவை மாநகராட்சி பொது சுகாதாரக் குழுத் தலைவருமான பெ.மாரிசெல்வன் அவர்கள், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், தலைமைக் கழகம் வாய்ப்பளிக்கும் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளராக விருப்பமனு வழங்கினார் அந்தத் தருணத்தில் வர்த்தகர் அணி…
சட்டமன்றத் தேர்தல் 2026: மண்டல அளவிலான 2 நாள் பயிற்சி தொடக்கம்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்–2026 முன்னிட்டு, மண்டல அளவிலான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான இரு நாள் பயிற்சி வகுப்பு இன்று தொடங்கியது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்தப் பயிற்சியை, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான மரு. இரா. சுகுமார், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். 7 மண்டலங்களில் ஒரே நேரத்தில் பயிற்சி தமிழ்நாடு முழுவதும் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோயம்புத்தூர், சேலம், மதுரை மற்றும்…
நாகர்கோவிலில் துரித நடவடிக்கை மூலம் சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டிய காவல்துறை: சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.!
நாகர்கோவில், மார்ச் 3: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதிகளில், அரசியல் கட்சியினரிடையே உருவான மோதல் சூழலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முனைவர் ஆர். ஸ்டாலின், இ.கா.ப., அவர்களின் தலைமையிலான காவல்துறை உடனடியாகச் செயல்பட்டுத் தடுத்து நிறுத்தியுள்ளது. இந்நிலையில், நேர்மையான முறையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் குறித்துச் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலிச் செய்திகளுக்குப் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடந்தது என்ன? கடந்த சில நாட்களாக நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசியல் கட்சியினரிடையே பதற்றமான…
தென் மண்டலம்… யாருக்குச் சொந்தம்? “தென் மாவட்டங்களில் திமுக-வின் மைக்ரோ பிளான் – அதிமுக-வின் மெகா நம்பிக்கை”…
“தமிழக தேர்தல் களம் தகித்துக் கொண்டிருக்கும் வேளையில், ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளின் பார்வையும் இப்போது தென் மாவட்டங்களை குறி வைக்க தொடங்கியுள்ளது. ஒருகாலத்தில் அதிமுகவின் எஃகு கோட்டையாக இருந்த தென் மண்டலம், இப்போது யாருடைய வசம்?எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்க திமுக போடும் ‘மைக்ரோ பிளான்’ என்ன? சசிகலா – ஓபிஎஸ் எனும் இரட்டை சவால்களை அதிமுக எப்படி எதிர்கொள்ளப் போகிறது? இதுகுறித்த ஒரு விரிவான செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.” “2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தென்…
மயான ஆக்கிரமிப்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.!
திருப்பூர் மாவட்டம் , உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வி.வல்லகுண்டாபுரம் கிராமத்தில் சுமார் இரண்டு ஏக்கரில் அரசின் பொது இடத்தில் மயானம் ஒதுக்கப்பட்டு அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யக்கூட சிரமம் ஏற்பட்டுள்ளது. மயானத்துக்கு செல்லும் பாதையை மறித்து வேலி அமைத்தும், கட்டிடம் கட்டியும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆக்கிரமிப்பு தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்…
ஏலச்சீட்டு நடத்தி ரூ.4 கோடி மோசடி! குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்க புகார் மனு வழங்கினர்.
மடத்துக்குளம் அடுத்துள்ள ஜோத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கண்ணீர் மல்க மனு ஒன்றை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கினர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, கணியூர் அருகே உள்ள அரியநாச்சிபாளையத்தைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். ஏலச்சீட்டில் 50க்கும் மேற்பட்ட நபர்கள் பணம் செலுத்தி வந்தோம் ரூபாய் 50 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை சீட்டு மாத சீட்டு தினசரி சீட்டு என ஏலச்சீட்டு…
