இதழ்கள்
கோழிக் கழிவுகளை ஏற்றி வந்த டெம்போ பறிமுதல், அனுமதியின்றி இயங்கும் பண்ணைக்கு கொண்டு சென்றதாக குற்றச்சாட்டு!
கன்னியாகுமரி, மார்ச் 7: கன்னியாகுமரி மாவட்டம் கடையல் மேலே முக்கு பகுதியில் கோழிக் கழிவுகளை ஏற்றி வந்த டெம்போ ஒன்றை வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாகச் சிறைபிடித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். அதிகாரிகளைக் கண்டதும் வாகன ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். சிறைபிடிக்கப்பட்ட இந்தக் கோழிக் கழிவுகள், ஆலஞ்சோலை பகுதியில் எவ்வித அனுமதியுமின்றி சட்டவிரோதமாக இயங்கி வரும் பன்றிப் பண்ணை ஒன்றிற்கு கொண்டு செல்ல முயன்றபோது அதிகாரிகளால் பிடிபட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் கடையல் பேரூராட்சித் தலைவர்,…
ஆதரவற்ற முதியவர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பட்டதாரி இளைஞர் மீட்பு…
ஆசிரமத்தில் அனுமதித்த நிமிர் மற்றும் தன்னார்வலர்கள்மனிதநேயம் நாகர்கோவில்,மார்ச் 7: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதரவின்றி தவித்த பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவரும், போதைக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்ட பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவரும் தன்னார்வலர்களால் மீட்கப்பட்டு, தோவாளையில் உள்ள அன்னை ஆசிரமத்தில் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர்.₹41,050-த்துடன் மீட்கப்பட்ட முதியவர். குருந்தன்கோடு பகுதியில், சுமார் 55 வயது மதிக்கத்தக்கப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வாய் பேச இயலாத முதியவர் ஒருவர் ஆதரவின்றி உருட்டு வண்டியில் அலைந்து திரிவதாகத் தகவல் கிடைத்தது. குமரி மாவட்ட…
புத்தளம் அரசு தொடக்கப் பள்ளியில் 80-வது ஆண்டு விழா:கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம்!
கன்னியாகுமரி, மார்ச் 8: கன்னியாகுமரி மாவட்டம், புத்தளம் அரசு தொடக்கப் பள்ளியின் 80-வது ஆண்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை (06.03.2026) மாலை 4.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு ராஜாக்கமங்களம் வட்டாரக் கல்வி அலுவலர் திரு. இசக்கியப்பன் M.Sc., B.Ed., அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக (PTA) தலைவர் திரு. B. பிரேம் ஆனந்த், பள்ளி மேலாண்மைக் குழு (SMC) தலைவர் திருமதி. G. அஜிதா மற்றும் பள்ளியின் முன்னாள்…
அனைத்து மக்கள் நீதிக் கட்சியின் மகளிர் அணி சார்பில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை..!
மதுரை தத்தனேரி பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டு காளியம்மன் கோவிலில் அடிப்படை வசதிகள் செய்யவும் கோவில் நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்று நடத்தவும் அனைத்து மக்கள் நீதி கட்சியின் மகளிரணி சார்பில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளர்கள் காளி என்றாலே உக்கிரமானவள், காளி என்றாலே அதீத சக்தி வாய்ந்தவள் என்று பக்தர்கள் பயம் கொள்வது உண்டு. எப்படி தன் பிள்ளைக்கு அநீதி நடப்பதை பார்த்துக் கொண்டு ஒரு தாய் அமைதியாக இருக்க முடியும். அப்படி தட்டி கேட்பது தான்…
குமரி மாவட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம்: அம்பேத்கர் சிலையைத் திறந்து வைத்தார்..!
கன்னியாகுமரி, மார்ச் 6: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகத் தமிழகத் துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகை புரிந்தார். இதன் ஒரு பகுதியாக, இறச்சகுளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சட்டமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையை அவர் விமர்சையாகத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார். இந்த விழாவில், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினரும் பால்வளத்துறை அமைச்சருமான திரு. மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் திமுக…
கன்னியாகுமரி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.91.20 கோடி மதிப்பிலான திட்டங்கள்; 7601 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..
நாகர்கோவில் | மார்ச் 6 கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு ரூ.91.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் தலைமையிலும், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். அழகுமீனா, இ.ஆ.ப. மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்டாலின், இ.கா.ப. ஆகியோர் முன்னிலையிலும் நிகழ்ச்சி…
குற்றத் தடுப்பு விழிப்புணர்வு முகாம்துங்காவி கிராமத்தில் கணியூர் காவல்துறையின் விழிப்புணர்வு – பொதுமக்கள் வரவேற்பு!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள கணியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துங்காவி கிராமத்தில், காவல்துறையினர் சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் IPS உத்தரவின் பேரில், உடுமலைப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. நமச்சிவாயம் DSPன் நேரடி மேற்பார்வையில் இந்த விழிப்புணர்வு முகாம் ஒருங்கிணைக்கப்பட்டது. கணியூர் காவல் ஆய்வாளர் பஞ்சுலட்சுமி தலைமையில், உதவி ஆய்வாளர் கார்த்திக் குமார் மற்றும் காவலர்…
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பழனி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.70.00 கோடி மதிப்பீட்டில் 137 படுக்கை வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.70.00 கோடி மதிப்பீட்டில் 137 படுக்கை வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டங்களை இன்று (05.03.2026) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு,…
மதுரை : கமல்ஹாசனின் MP தீவிர ரசிகர் இயக்கிய தாய் கிழவி படம்..
மதுரையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் டாக்டர் கமல்ஹாசனின் MP அவர்களின் தீவிர ரசிகரான சிவக்குமார் முருகேசன் அவர்கள் இயக்கிய தாய் கிழவி திரைப்படம் மக்கள் நீதி மய்யம் கட்சி மதுரை மாவட்ட சார்பாக மினிபிரியா திரையரங்கில் திரைப்படத்தை நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் மக்களின் நாயகன் R. சொக்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள், குடும்பத்தினர் திரைப்படத்தை கேக் வெட்டியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடிய மகிழ்ந்தார்கள் தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி
இறச்சக்குளம் பகுதியில் நாளை அம்பேத்கர் சிலை திறப்பு: விழா ஏற்பாடுகளை என்.சுரேஷ்ராஜன் ஆய்வு…
கன்னியாகுமரி மாவட்டம் இறச்சக்குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலையை, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். இதனையொட்டி விழா நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேடை மற்றும் பிற ஏற்பாடுகளை, தமிழ்நாடு உணவு ஆணையத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான என்.சுரேஷ்ராஜன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் வை.தினகரன், தி.மு.க மாநில வர்த்தகர் அணி இணைச்…
