புதுடெல்லியில், ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்த, திருநெல்வேலி எம்.பி. ராபர்ட் புரூஸ்!
திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் “வழக்கறிஞர்” C.ராபர்ட் புரூஸ் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை, புதுடெல்லியில் உள்ள, அவருடைய அலுவலகத்தில் நேரில் சந்தித்து, திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில், ரயில்வே துறை சார்பாக நிறைவேற்றப்பட வேண்டிய, பல்வேறு, திட்டப்பணிகளை நிறைவேற்றி தருமாறு வலியுறுத்தி, கோரிக்கை மனு வழங்கினார். அவர் அளித்துள்ள மனுவில், குறிப்பிட்டிருக்கும் கோரிக்கைகளுள் சில வருமாறு:-ரயில் சேவைகள் அதிகரிப்பு மற்றும் நீட்டிப்புகள். *மதுரை-பெங்களூர் 20671 “வந்தே பாரத்” ரயிலை, திருநெல்வேலி வரை நீட்டிப்பதோடு திருச்சி செல்லாமல் நேரடியாக,…
