திருநெல்வேலி தாழையூத்து சங்கர்நகரில், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற, மின் சிக்கன வாரவிழா, விழிப்புணர்வு பேரணி! மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் துவக்கி வைத்தார்!
திருநெல்வேலி,ஜன.7:- தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பாக, “மின்சார சிக்கன வார விழா” ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி முதல், டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி வரையிலும் கொண்டப்படுகிறது. அந்த காலகட்டத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில், மழையும்- வெள்ளமுமாக இருந்ததால், இந்த வாரவிழாவை நடத்த இயலவில்லை. எனவே, திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்தின், திருநெல்வேலி கிராமப்புற கோட்டத்தில் பொது மக்களிடையே, மின் பயன்பாட்டில் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடும் நோக்கத்தில், இம்மாவட்டம் சங்கர் நகர், தாழையூத்து…
