Headlines
வடசேரி பேருந்து நிலையக் கடைகளுக்கு ₹1 லட்சம் அபராதம்.

வடசேரி பேருந்து நிலையக் கடைகளுக்கு ₹1 லட்சம் அபராதம்.

கழிவுநீர் வெளியேற்றம் குறித்து புகார்; மாநகராட்சி நடவடிக்கை. நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் சில கடைகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கடைகளுக்கு மொத்தம் ₹1 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். புகாரைத் தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மேரி பிரின்சி லதா பேருந்து நிலையத்துக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். அப்போது, சில கடைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீர் பொதுச் சுகாதாரத்துக்கு…

Read More
பொறுப்புணர்வின் உதாரணம்; சுற்றுலா பயணியிடம் செல்போன் ஒப்படைப்பு

பொறுப்புணர்வின் உதாரணம்; சுற்றுலா பயணியிடம் செல்போன் ஒப்படைப்பு.

கன்னியாகுமரி, மே : கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்திருந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரின்ஸ் என்ற சுற்றுலா பயணி தனது செல்போனை தவறவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய தொடர்புகள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் அடங்கியிருந்த அந்த செல்போன் காணாமல் போனதால் அவர் கவலையடைந்திருந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர். மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் விசாரணையின் மூலம் செல்போன் மீட்கப்பட்டு, அதன் உரிமையாளர் பிரின்ஸிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. சுற்றுலா மையமாக விளங்கும் கன்னியாகுமரியில்…

Read More
திருமாவளவன் குறித்து அவதூறு பேச்சு: சமூக வலைதள பதிவுக்கு எதிராக காவல்துறையில் மனு

திருமாவளவன் குறித்து அவதூறு பேச்சு: சமூக வலைதள பதிவுக்கு எதிராக காவல்துறையில் மனு.

பட்டியலின மக்களை இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு; நடவடிக்கை கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் புகார் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்றை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்க மாநில செயலாளர் கலைச்செல்வி மனு அளித்துள்ளார். அந்த மனுவில், “Rexona Rex (@sonarx_official24)” என்ற இன்ஸ்டாகிராம் கணக்கின் உரிமையாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் குறித்து அவதூறாக பேசியதுடன், பட்டியலின மக்களையும்…

Read More
முகில் சட்டக் கல்லூரி சேர்க்கை சர்ச்சை: 60 மாணவர்களின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறி?

முகில் சட்டக் கல்லூரி சேர்க்கை சர்ச்சை: 60 மாணவர்களின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறி?

அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை மீறிய சேர்க்கை குற்றச்சாட்டு; மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் மனு கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படும் முகில் சட்டக் கல்லூரியைச் சுற்றி உருவாகியுள்ள சேர்க்கை சர்ச்சை, 60க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி எதிர்காலம் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை மீறி மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் முதல் ஆண்டு எல்.எல்.பி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உடனடி தலையீடு கோரியுள்ளனர். படந்தாலுமூடு பகுதியில் இயங்கும் இந்த சட்டக் கல்லூரியில்,…

Read More
பணம் இல்லை, செல்போனும் பறிபோனது... நடுக்கூடத்தில் கண்ணீருடன் நின்ற அசாம் இளைஞர்கள்! கைகொடுத்த குமரி மக்கள்!!

பணம் இல்லை, செல்போனும் பறிபோனது… நடுக்கூடத்தில் கண்ணீருடன் நின்ற அசாம் இளைஞர்கள்! கைகொடுத்த குமரி மக்கள்!!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சாஹீன் அகமது, ஜுயல் அக்தர் ஆகிய இருவருக்கும் வயது வெறும் 20 தான். குடும்ப வறுமையைப் போக்கலாம் என்ற ஆசையில், பல ஆயிரம் கிலோமீட்டர்கள் தாண்டி வந்து, கூடங்குளம் அனல்மின் நிலையத்தில் உள்ள PPK என்ற ஒப்பந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளனர். ஆனால், அங்கு அவர்களுக்குத் தங்குமிடம், உணவு, செய்த வேலைக்கான சம்பளம் என எதுவும் முறையாக வழங்கப்படவில்லை. இரக்கமின்றி, அடிமைகளைப் போல அதிக நேரம் வேலை வாங்கி அந்த நிறுவனம் கொடுமைப்படுத்தியதாக…

Read More
விளையாட்டு பெயரில் வணிகம்? ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு

விளையாட்டு பெயரில் வணிகம்? ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு.

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் சமீபத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வு, அதன் நடத்தும் முறையைச் சுற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆரோக்கியமான விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட இந்த நிகழ்வு, வணிக நோக்கங்கள் அதிகம் பிரதிபலித்ததாக சில பெற்றோரும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். நிகழ்வில் பங்கேற்ற குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட டி-ஷர்ட்களில் நிறுவன விளம்பரங்கள் இடம்பெற்றதுடன், அரங்கம் முழுவதும் தற்காலிக கடைகள் (stalls) அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. கட்டண வசூல் செய்யப்பட்டிருந்த போதிலும், குழந்தைகள் நீண்ட நேரம்…

Read More
அம்பேத்கர் 135: கன்னியாகுமரியில் விசிக மரியாதை நிகழ்வு

அம்பேத்கர் 135: கன்னியாகுமரியில் விசிக மரியாதை நிகழ்வு.

வடசேரியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி; கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில், பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்தநாளை முன்னிட்டு விசிக சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. வடசேரியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வை கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் கோபிபேரறாவாளன் தலைமையேற்றார். சமூக நீதி, சமத்துவம் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்து அம்பேத்கர் முன்வைத்த கொள்கைகள் குறித்து சுருக்கமாக பேசப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்….

Read More
நாகர்கோவில் திமுகவில் ஒரே கட்சி, இரு வேட்பாளர்கள் : பின்னணி என்ன?

நாகர்கோவில் திமுகவில் ஒரே கட்சி, இரு வேட்பாளர்கள் : பின்னணி என்ன?

நாகர்கோவில் தொகுதியில் ஆளும் திமுக கட்சி சார்பில் ஒரே நேரத்தில் இரண்டு பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ வேட்பாளராக எஸ். ஆஸ்டின் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் தரப்பில் மட்டும் மூன்று வேட்புமனுக்களும், அதே கட்சியின் எம். சிவராஜ் தரப்பில் ஒரு வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டிருப்பது தொகுதி மக்களிடையேயும் அரசியல் களத்திலும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே தொகுதியில் ஒரு கட்சிக்கு ஏன் இத்தனை மனுக்கள் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழலாம். இது எந்தவித உள்கட்சிப்…

Read More
தோல்வி பயத்தில் திணறும் விளவங்கோடு காங்கிரஸ்! கேரளா வேட்பாளர் அறிவிப்புக்கு எதிராகவே காங்கிரஸ் தொண்டர்கள் சாலை இறங்கினர்

தோல்வி பயத்தில் திணறும் விளவங்கோடு காங்கிரஸ்! கேரளா வேட்பாளர் அறிவிப்புக்கு எதிராகவே காங்கிரஸ் தொண்டர்கள் சாலை இறங்கினர்.

விளவங்கோடு, ஏப். 4: கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட, கேரளாவைச் சேர்ந்த டி.டி. பிரவீன் என்பவரை வேட்பாளராக அறிவித்ததை எதிர்த்து, அந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறக் கோரி இன்று விளவங்கோட்டில் காங்கிரஸ் கட்சி தொண்டர்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “விளவங்கோட்டில் காங்கிரஸுக்கு உள்ளூர் முகங்கள் இல்லையா?”, “கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்த தொண்டர்களின் தியாகத்திற்கு இதுவே பரிசா?” என்ற கேள்விகளை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள்,…

Read More
தேவாலய பாதுகாப்பில் காவல் துறை வெற்றி “மன அமைதியுடன் வழிபாடு செய்தோம்” – மாணவி பாராட்டு

தேவாலய பாதுகாப்பில் காவல் துறை வெற்றி “மன அமைதியுடன் வழிபாடு செய்தோம்” – மாணவி பாராட்டு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையின் செயல்திறன் பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது. குறிப்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.பி. ஸ்டாலின் தலைமையில் 2025 கிறிஸ்துமஸ் திருவிழா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செயல்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், நாகர்கோவில் சேர்ந்த மாணவி என். நேத்ரா தேவி, “இந்த ஆண்டு மன அமைதியுடன் தேவாலயத்திற்கு சென்று வர முடிந்தது” எனக் கூறி, நேரில் சந்தித்து பாராட்டு பத்திரம் வழங்கினார். காவல் துறையின் விழிப்புணர்வு…

Read More