கன்னியாகுமரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் — முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் தீவிரம்!
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் திருமதி ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) முதல்நிலை பரிசோதனை பணிகளை இன்று (11.12.2025) நேரில் ஆய்வு செய்தார். நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தொகுதியில் அமைந்துள்ள EVM கிட்டங்கியிலேயே இந்த பரிசோதனைகள் நடைபெற்றன. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, மாவட்டத்தில் மொத்தம் 5594 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4040 கட்டுப்பாட்டு கருவிகள், 2802 VVPAT கருவிகள்…
