கோவை மாநகராட்சி 80-வது வார்டில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பொது கழிப்பிடங்கள் திறப்பு விழா!
கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், 80-வது வார்டுக்கு உட்பட்ட உப்பு மண்டி வீதி, கெம்பட்டி காலனி பகுதியில், பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் தூய்மை இந்தியா (2.0) (ஸ்வச் பாரத் மிஷன்-SBM) திட்டத்தின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பொதுக் கழிப்பிடங்கள் திறப்பு விழா இன்று காலை,சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப. ராஜ்குமார் மற்றும் மாண்புமிகு மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கி, புதிய…
