Headlines
குமரியில் விழிப்புணர்வு மாரத்தான்: 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

குமரியில் விழிப்புணர்வு மாரத்தான்: 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

தலைக்கவசம் அணிவோம்; போதைப்பொருளை ஒழிப்போம் என்ற விழிப்புணர்வுடன் காவல்துறை–பொதுமக்கள் இணைந்து ஓட்டம் கன்னியாகுமரி, செப். 4:கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட 10 கி.மீ. விழிப்புணர்வு மாரத்தானில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் வளைவு பகுதியில் இருந்து இன்று (செப். 4) அதிகாலை 5 மணிக்கு மாரத்தான் தொடங்கியது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS, தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. “தலைக்கவசம்…

Read More
மாணவர் விடுதிகளில் மதுபாட்டில்கள்? விசாரணை நடத்த விசிக கோரிக்கை

மாணவர் விடுதிகளில் மதுபாட்டில்கள்? விசாரணை நடத்த விசிக கோரிக்கை

புத்தன்பங்களா சாலையில் உள்ள சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதிகளை இரவு நேரத்தில் ஆய்வு செய்ய வலியுறுத்தல் நாகர்கோவில் புத்தன்பங்களா சாலையில் செயல்பட்டு வரும் சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதிகளில் இரவு நேரங்களில் மதுபானம் அருந்தப்படுவதாகவும், மறுநாள் காலையில் விடுதி வளாகத்தில் காலி மதுபாட்டில்கள் மற்றும் சிகரெட் பொருட்கள் கிடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்தப் புகார் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் சௌத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

Read More
ஒப்பந்தப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்: ஊதிய உயர்வு, விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகள்

ஒப்பந்தப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்: ஊதிய உயர்வு, விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகள்

கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒப்பந்தப் பணியாளர்கள், ஊதிய உயர்வு, வார விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்தப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், வார விடுமுறை வழங்க வேண்டும் என்பதுடன், பாலியல் தொல்லை குற்றச்சாட்டுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலாளரை மீண்டும் பணியில் அமர்த்தக் கூடாது என்பதும் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட முக்கியக் கோரிக்கைகளில் அடங்கும். ஏற்கனவே பாலியல் தொல்லை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நபர்…

Read More
கல்லூரி அருகே தேநீர் கடை: மாணவர்களுக்கு புகையிலைப் பொருட்கள் விற்பனையா? சமூக ஆர்வலர்கள் புகார்; அதிகாரிகள் விசாரணை நடத்த கோரிக்கை!

கல்லூரி அருகே தேநீர் கடை: மாணவர்களுக்கு புகையிலைப் பொருட்கள் விற்பனையா? சமூக ஆர்வலர்கள் புகார்; அதிகாரிகள் விசாரணை நடத்த கோரிக்கை!

நாகர்கோவில், ஆக. 28: நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் இந்து கல்லூரி அருகே புதிதாக செயல்பட்டு வரும் தேநீர் கடையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சிகரெட், பீடி உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவற்றின் உண்மைத் தன்மை மற்றும் கடையில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதா என்பது அதிகாரப்பூர்வமாக…

Read More
கன்னியாகுமரியின் முதல் கிராண்ட் மாஸ்டர்: சாதனை படைத்த நாகர்கோவில் இளைஞர் அஸ்வத்!

கன்னியாகுமரியின் முதல் கிராண்ட் மாஸ்டர்: சாதனை படைத்த நாகர்கோவில் இளைஞர் அஸ்வத்!

நாகர்கோவில்,ஆக 28,2026 : கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டாறு செட்டித் தெருவைச் சேர்ந்த செஸ் பயிற்சியாளர் சிவாவின் மகனும், ‘கேப் செஸ் அகாடமி’யின் (Cape Chess Academy) மாணவருமான அஸ்வத், சர்வதேச அளவில் சாதனை படைத்து ‘கிராண்ட் மாஸ்டர்’ (Grandmaster) பட்டம் பெற்றுள்ளார். இதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தின் 1-வது கிராண்ட் மாஸ்டராகவும், தமிழ்நாட்டின் 38-வது மற்றும் இந்தியாவின் 98-வது கிராண்ட் மாஸ்டராகவும் உருவெடுத்து வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார். தமது 3 வயதிலிருந்தே தந்தையிடம் சதுரங்கம் பயின்று…

Read More
குழந்தைகள் பாதுகாப்புக்கு விழிப்புணர்வு: ஆசாரிபள்ளம் பகுதியில் ‘நிமிர் – The Rising Team’ பிரசாரம்.

குழந்தைகள் பாதுகாப்புக்கு விழிப்புணர்வு: ஆசாரிபள்ளம் பகுதியில் ‘நிமிர் – The Rising Team’ பிரசாரம்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்களின் சிறப்பு வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் ‘நிமிர் – The Rising Team’ சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் ஆசாரிபள்ளம் பகுதியில் நடைபெற்றது. திருமதி ஜெயந்தி, திருமதி சுமதி, திருமதி ஆஷா ஆகியோர் பொதுமக்களை நேரில் சந்தித்து, குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விளக்கினர். தவறான தொடுதல், பாலியல் வன்கொடுமை, குழந்தைத் திருமணம், கடத்தல், குழந்தைத்…

Read More
கன்னியாகுமரி வெள்ளமோடியில் அதிர்ச்சி: லேபிள் இல்லாமல், மார்க்கரால் எழுதி பேக்கரி தின்பண்டங்கள் விற்பனை! உறங்குகிறதா உணவுப் பாதுகாப்புத் துறை?

கன்னியாகுமரி வெள்ளமோடியில் அதிர்ச்சி: லேபிள் இல்லாமல், மார்க்கரால் எழுதி பேக்கரி தின்பண்டங்கள் விற்பனை! உறங்குகிறதா உணவுப் பாதுகாப்புத் துறை?

வெள்ளமோடி, ஆக. 27: கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமோடி பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பேக்கரியில், மக்களின் உடல்நலனோடு விளையாடும் வகையில் எவ்வித முறையான லேபிளும், காலாவதி தேதியும் இன்றி தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு விற்பனைக்காக அடுக்கப்பட்டுள்ள பல பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, எடை அல்லது FSSAI உரிம எண் என எந்தவொரு அடிப்படைத் தகவலும் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவில்லை. சில டப்பாக்களில் மட்டும் பெயரளவுக்கு மார்க்கர் (Marker)…

Read More
தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் : ஓணம் கொண்டாட்டத்துடன் த.வெ.க. அரசின் 100 நாள் சாதனை நிகழ்ச்சி.

தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் : ஓணம் கொண்டாட்டத்துடன் த.வெ.க. அரசின் 100 நாள் சாதனை நிகழ்ச்சி.

நாகர்கோவில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில், ஓணம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. த.வெ.க. அரசின் 100 நாட்கள் சாதனைகளை கொண்டாடும் வகையிலும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. த.வெ.க. முக்கிய நிர்வாகியும் தொழிலதிபருமான பால்ராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட இணைச் செயலாளர் பிரேம் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். விழாவில் தொழிலதிபர் பால்ராஜ் மற்றும் மாவட்ட செயலாளர் மாதவன்…

Read More
மின்வயர் மாற்றும் பணியில் விபத்து: மின்வாரிய ஊழியர் தீவிர சிகிச்சையில்

மின்வயர் மாற்றும் பணியில் விபத்து: மின்வாரிய ஊழியர் தீவிர சிகிச்சையில்.

தேரோட்டத்தையொட்டி மின்பாதையை மாற்றியமைத்தபோது சம்பவம்; தவெக நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல் நாகர்கோவில் கோட்டார் ஏழகர பெருமாள் கோவில் தேரோட்டத்தையொட்டி, தெருவீதிகளில் உள்ள மின்வயர்களை பாதுகாப்பாக மாற்றியமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர் ஒருவர் எதிர்பாராத மின்விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தேரோட்டம் நடைபெற்ற பகுதியில் நேற்று காலை மின்வயர்களை மாற்றியமைக்கும் பணியில், தெங்கம்புதூர் பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் அரவிந்த் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின்கம்பி மீது மற்றொரு…

Read More
கோட்டார் பெருமாள் கோவில் தேரோட்டம் தொடக்கம்

கோட்டார் பெருமாள் கோவில் தேரோட்டம் தொடக்கம்.

திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்த தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். மாதவன் நாகர்கோவில் கோட்டார் ஏழகரம் வாகையடி தெருவில் உள்ள பெருமாள் கோவில் தேர்த் திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற தேரோட்டத்தை, தமிழக வெற்றிக் கழகத்தின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். மாதவன், திருத்தேர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவிற்கு ஆதரவு…

Read More