நீலகிரி மாவட்ட தோட்டதொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் 61 வது பொதுப்பேரவை கூட்டம் நடைபெற்றது.
குன்னூர் மவுண்ட்ரோடு, புனித அந்தோணியார் தேவாலயம் திருமண மண்டபத்தில் ,நீலகிரி மாவட்டத்தோட்டத்தொழிலாளர் கூட்டுறவுச் சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தின் 61-வது பொதுப்பேரவைக்கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் துணைச் செயலாளர் திரு.நீலமேகம், ஆண்டறிக்கை மற்றும் ஆண்டு வரவு செலவை உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தார். சங்கத்தின் செயலாளர் திருமதி.ஜூலியட் சகாயராணி முன்னிலை வகித்தார். நீலகிரி மண்டலக் கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளர், திரு.இரா.தயாளன் அவர்கள், தலைமையேற்றார் . அவர் பேசுகையில் சர் ப்ரெடெரிக் நிக்கல்சன் அவர்களால் தான் இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் தோன்றியது. பணக்கார வியாபாரிகளின்…
