திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த தொப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி கிராமம் உள்ளது. ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி உள்ள திருமண மண்டபத்தில் அப்பகுதி மக்கள் பல்வேறு நிகழ்வுகளை செய்து வருகின்றனர்.

தொடர்ந்து திருமண மண்டபத்திற்கு அருகில் உள்ள சின்னத்துரை என்பவர் புதிதாக நடைபாதை அமைத்து அவ்வழியே நான்கு சக்கர வாகனங்களை இயக்கி வருகிறார்.
மேலும் விசேஷ காலங்களில் ஆதிதிராவிடர் மக்கள் மண்டபம் அருகே மேற்கூரை அமைத்து சமையல் செய்யும் பொழுதும் மற்றும் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுதும் அவ்வழியே செல்ல வேண்டும் என்று சின்னத்துரை கூறிய நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து பெரியசாமி என்பவர் பழனி வட்டாட்சியரிடம் சின்னத்துரை என்பவர் புதிதாக ஏற்படுத்திய நடைபாதையை அடைக்க வேண்டும் அரசு ஆதிதிராவிடர் மக்களுக்காக வழங்கப்பட்ட நிலங்களில் பொதுக் கழிப்பறை, திருமண மண்டபம், கோயில்கள், விவசாயக்களம் போன்றவற்றை அமைத்து மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அரசுக்கு சொந்தமான இடத்தை பல்வேறு நபர்கள் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அதனை முறையாக அளந்து மீட்டு மீண்டும் ஆதிதிராவிடர் மக்களுக்கு நிலம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் வருவாய் துறையின் மூலம் கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் சர்வேயர் அளவை பணி நடைபெற்றன. இதில் ஒரு சாரமாக அளவைப் பணி நடைபெற்றதாகவும் மீண்டும் சரியான முறையில் இடத்தை அளக்க வேண்டும் என அப்பகுதி ஆதிதிராவிடர் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் உள்ள 366 நபர்களுக்கு ஈ பட்டா வழங்க வேண்டும் என சமூக நீதித்துறை அமைச்சருக்கும் தமிழக முதலமைச்சருக்கும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் பூக்கடை செந்தில்குமார் கிறிஸ்துவ பேரவை மாநில துணைச் செயலாளர் தங்கராஜ் வணிகர் அணி மாநில செயலாளர் பொன்வளவன் பொறியாளர் அணி கன்னிமுத்து மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்..
