வைகிங் நிறுவனம் சார்பில் சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் நீலகிரி மாவட்ட போக்குவரத்து காவல்துறையினருக்கு நிழற்குடைகள் மற்றும் தடுப்புகள் வழங்கினர்.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் வைகிங் நிறுவனம் சார்பில் சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் நீலகிரி மாவட்ட போக்குவரத்து காவல்துறையினருக்கு நிழற்குடைகள் மற்றும் தடுப்புகள் வழங்கப்பட்டுள்ளன மழை மற்றும் வெயில் காலங்களில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் கோடை காலத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சிறப்பு காவலர்கள் அமர்ந்து கண்காணிக்கவும் இந்த நிழற்குடைகள் உதவியாக இருக்கும். இன்று காலை உதகை சேரிங் கிராஸ் பகுதியில் இந்த நிழற்குடைகளை வைக்கிங் நிறுவனம் சார்பில் மாவட்ட…
