தமிழ்நாடு
பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது,உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, விரைவில் தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்! நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி உறுதி!
திருநெல்வேலி, தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்[DGP] உத்தரவுப்படி, பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள், வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும், அந்தந்த ஊர்களில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களில், நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று [ஜன.29] காலையில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற முகாமில், மொத்தம் 11 பேர் கலந்து கொண்டு, காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணியிடம், புகார் மனுக்களை அளித்தனர். ” குறை தீர்க்கும்…
திருநெல்வேலியில், சாலையோர உணவு வணிகர்களுக்காக, நெல்லை மாநகராட்சியுடன் இணைந்து, உணவு பாதுகாப்புத்துறை நடத்திய, மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி! நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பயன் பெற்றனர்!
திருநெல்வேலி,ஜன.29:-நெல்லை மாநகராட்சி மற்றும் தமிழக அரசு உணவு பாதுகாப்பு துறை, திருநெல்வேலி பிரிவு ஆகியன இணைந்து, இன்று [ஜன.2] காலையில், சாலையோர உணவு வணிகர்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் உணவு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி, கலப்படத்தை கண்டறியும் முறைகள், செறிவூட்டப்பட்ட உணவு, பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் ஆகியவை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, நெல்லை கொக்கிர குளம் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து, நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சாலையோர உணவு விற்பனையாளர்கள் 121 நபர்களுக்கு, கட்டணமில்லா…
விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சராக அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டத்தல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும விழா வில் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை நேரில் வழங்கினார் உடன் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் : GB.குருசாமி
சீரிய நிர்வாக திறமையால், இந்தியாவுக்கே முன்மாதிரியாக, தமிழ்நாட்டை வழி நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! அமைச்சர் கே.என்.நேரு புகழாரம்!
திருநெல்வேலி,ஜன.28:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் [பிப்ரவரி] 6 மற்றும் 7 தேதிகளில், திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தர உள்ள நிலையில், பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், இது தொடர்பான ஆலோசனை கூட்டம், இன்று [ஜன.28] காலையில், நடைபெற்றது. திருநெல்வேலி மத்திய மற்றும் கிழக்கு மாவட்டங்களின், திமுக பொதுக்குழு உறுப்பினர்கள், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரும், திருநெல்வேலி மாவட்டத்துக்கான…
கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காதலி வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 27.1.25மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்செவித்திறன் குறையுடைய 6 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 6000/- மதிப்பீட்டில் காதொலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டதுஇந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் அவர்களின் தலைமையில் முடநீ க் கியல் வல்லுனர் செயல் திறன் உதவியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் இன்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரங்கப்பனூர் ஊராட்சி நடு நிலைப் பள்ளியில் 73 வது #குடியரசு தின விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் K_அர்ச்சனாகாமராஜன் அவர்கள் தலைமையில் நமது மல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தேசியக் கொடி #மூவர்ணக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கி சிறப்பித்து ஏற்றப்பட்டது பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியது இதில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் வார்டு உறுப்பினர்கள் பச்சையாபிள்ளை ஏழுமலை மாசிலாமணி மற்றும் பெரமன் மாது…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜெயம் பள்ளியில் குடியரசு தின விழா.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 76 வதுகுடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் துணை தலைவர் திரு P .A மகேந்திரன் தலைமையில் ,செயலாளர் J சுகந்தி பட்டுராஜன் கொடியேற்றி துணை செயலாளர் திரு N பிரபாகரன் மற்றும் ஜெயம் குழு உறுப்பினர் G கலைச்செல்வி , பள்ளி முதல்வர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி
நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக 76-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
76-வதுகுடியரசு தின விழாவை முன்னிட்டு நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளையின் சார்பாக முன்னாள் ராணுவ வீரர்கள் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பாக நடைபெற்ற நடும் பணியில் பங்கு பெற்றதற்கான பாராட்டு சான்றிதழ் நம்பிக்கை சிறகுகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் வழங்கி கெளரவப்படுத்தினர்.
தந்தை பெரியார் 51வது நினைவு நாள் மற்றும் வைக்கம் வெற்றி முழுக்கம்.
ஜனவரி 24 திண்டுக்கல் மாவட்டத்தில் தந்தை பெரியாரின் 51வது நினைவு நாள் மற்றும் வைக்கம் வெற்றி முழக்கம் தமிழ்நாடு கேரளா முதலமைச்சர்களுக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி மணிக்கூண்டு சாலையில் வழக்கறிஞர் மு.ஆனந்தமுனிராசன் தலைமையில் நடைபெற்றது. இதில் தொடக்கவுரை I.P.செந்தில்குமார்பழனி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் R.சச்சிதானந்தம் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்,சிறப்புரைசே.மெ.மதிவதனி துணைப் பொதுச் செயலாளர் , வரவேற்புரை த. கருணாநிதி மாவட்ட செயலாளர் மற்றும் இளமதி ஜோதிபிரகாஷ் மாநகராட்சி மேயர், ராஜப்பா துணை மேயர்,…
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட அரியலூரில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் அரியலூரில் 0 முதல் 18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி தலைமையில் துவங்கப்பட்டது முகாமில் 0 முதல் 18 வயது வரை உள்ள 57 மாணவர்கள் கலந்து கொண்டனர். அணைத்து மாணவர்களுக்கும் udid உடன் கூடிய தேசிய அடையாள அட்டை பதிவு செய்ய பட்டது மேலும் முகாமில் எலும்பு முறிவு மருத்துவர் சிவராமன் காது மூக்கு தொண்டை மருத்துவர் ராஜேஸ்வரி கண்…
