தமிழ்நாடு
உடுமலையில் முன்னாள் இராணுவ வீரர்கள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்.
உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்க ஆலோசனை கூட்டம் லெப்டினென்ட்சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் உள்ள முன்னாள் இராணுவ வீரர் நலச்சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் இராமலிங்கம் தலைமை வகித்தார் .பொருளாளர் சிவகுமார், லெப்டினன்ட் கர்னல் (ஓய்வு) மகேஷ் பாபு, சுபேதார் நடராஜ், லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை நிறுவனர் கே.ஆர்.எஸ் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்க உறுப்பினர்களின் குறை நிறைகளை பற்றி விவாதிக்கப்பட்டது . உறுப்பினர்களின்பணிக்கால ஆவணங்கள் சரி செய்து…
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி ஏர்வாடியில், பெண்கள் பாதுகாப்பு குறித்த, விழிப்புணர்வு கருத்தரங்கம்! எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிர் பிரிவான, விமன் இண்டியா மூவ்மெண்ட் சார்பாக நடைபெற்றது! திரளான பெண்கள் பங்கேற்பு!
“பெண்களின் பாதுகாப்பு, மனித சமுதாயத்தின் பொறுப்பு!” என்னும் தலைப்பில், தேசிய அளவில் நடைபெற்று வரும், முனைப்பான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக,எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிர் பிரிவான விமன் இண்டியா மூவ்மெண்ட் [WOMEN INDIA MOVEMENT] சார்பாக, திருநெல்வேலி புறநகர் மாவட்டம், நாங்குநேரி ஏர்வாடி “பைத்துல் ஸலாம்” சமுதாய நலக்கூடத்தில் வைத்து, நகர தலைவி என். ஹமீதா அக்பர் தலைமையில், “விழிப்புணர்வு கருத்தரங்கம்” நடைபெற்றது. நகர செயற்குழு உறுப்பினர் சைபுநிஷா பேகம், அனைவரையும் வரவேற்று, பேசினார். எஸ்.டி.பி.ஐ. கட்சியின், திருநெல்வேலி…
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்டம். தென் காசி மேற்கு ஒன்றியம், பண் பொழி பேரூர் கழகத்தில் மாவட்டச் செயலாளர் வே.ஜெயபாலன், செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை தலைமையில் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான்ஒலி முன்னிலையில் பண்பொழி பேரூர் கழகச் செயலாளர் இராஜராஜன் ஏற் பாட்டில் பண்பொழி ஐந்து புள்ளி பஸ் நிலையம் அருகி லும் ஜும்மா பள்ளி அருகி லும் கழகக் கொடியினை ஏற் றியும்…
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் துறையினர் சார்பாக வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலையத்தில் பழைய வாகனங்கள் மற்றும் புதர்களை அகற்றி பசுமையாக மாற்றிடும் நோக்கத்துடனும் பழனியை பசுமையாக மாற்றும் நோக்கத்துடன் வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பழனி நகர் காவல் நிலையத்தில் தேக்கு, வேம்பு, மாதுளை, முருங்கை போன்ற மரக்கன்றுகளை பழனி உட்கோட்டம் பகுதியில் அமைந்துள்ள பழனி காவல் நிலையத்தில் நகர் காவல் ஆய்வாளர் மணிமாறன், நகர் காவல் சார்பு ஆய்வாளர் விஜய், சார்பு ஆய்வாளர் பாலகுமாரசாமி,…
முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயாரிக்கும் பணி.
மாதவரம் தொகுதிக்குப்பட்ட பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயாரிக்கும் பணிகள் இன்று மாதவரத்தில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின்படி, மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் தலைமையில், உணவு தயாரிக்கும் பணிகளை மண்டல குழு தலைவர் நந்தகோபால், மாதவரம் தெற்கு பகுதி செயலாளர் துக்காராம், மாதவரம் மண்டல அலுவலர்கள் ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில் மாநகராட்சி அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் வழக்கறிஞர் புழல் அன்பரசு உடனிருந்தனர்….
உடுமலை நகராட்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் பணி துவக்கம்.
உடுமலை, நவ 29-உடுமலை நகராட்சியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த கருத்தடை ஆபரேஷன் செய்யும் பணி துவங்கி உள்ளது. உடுமலை நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன அனைத்து பகுதிகளிலும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெரு நாய்கள் எண்ணிக்கை பெருகி சாலை மற்றும் வீதிகளில் வருவோர் போவோர்களை விரட்டுவதும் கடிப்பதும் தொடர்கிறது இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர். தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் அவைகளுக்கு கருத்துடைய ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்தது…
உடுமலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்.
உடுமலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமிமுருகன் தலைமை வகித்தார்.வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சிவகுருநாதன்,சுரேஸ்குமார் (கி.ஊ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அதைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.அப்போது பல்வேறு செலவினங்கள் மற்றும் இதர தீர்மானங்கள் 43 மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டது. அதன்படி தளி பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி,பேரூராட்சி சமையலறை கூடம் உள்ளிட்ட 7 கட்டிடங்களை தளி பேரூராட்சி நிர்வாகத்திற்கு…
திருநெல்வேலியில், நடிகர் சிவாஜி கணேசன் முழு உருவ வெண்கலச்சிலை! மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்!
திருநெல்வேலி,நவ.29:- நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் வைத்து, வட்டார மற்றும் மண்டல காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்ற, ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முன்னாள் இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பல்வேறு கருத்துக்களை வழங்கினார்.காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு, மாநில இணைத்தலைவர் “வழக்கறிஞர்” ஏ.மகேந்திரன், தென்காசி மாவட்ட காங்கிரஸ்…
திருநெல்வேலியில், துணை முதலமைச்சர் பிறந்த தினவிழா! அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்.எல்.ஏ.!
தமிழ்நாடு துணை முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின் 48-வது பிறந்தநாளை முன்னிட்டு, திருநெல்வேலி டவுண், ஜவகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திருநெல்வேலி மாவட்ட, திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அருள்வின் ரொட்ரிக்கோ ஏற்பாட்டில், நடைபெற்றது. பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி,…
திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் அமலாக்கத்துறை ஆய்வு.
நவபர் 29 : திண்டுக்கல் ஜி டி என் சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் மூன்றாவது முறையாக அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் இரண்டு வாகனங்களில் 10 அமலாக்க துறையினர் அவரது தரணி குழுமம் அலுவலகத்தில் 7 மணி முதல் 3 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தப்பட்டு வருகின்றனர் திண்டுக்கல் ஜி டி என் சாலையில் தரணி குழுமம் நிறுவனம் செயல்பட்டு அதன் நிறுவனர் ரெத்தினம் இவர் பிரபல தொழிலதிபர் ஆவார்…
