திண்டுக்கல் மாவட்டம் பழனி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த 17 நபர்களை ஸ்மித் என்ற தனியார் நிறுவனம் வேலையில் அமர்த்தப்படாமல் காலம் தாழ்த்தி வருகின்றது.
தொடர்ந்து பல்வேறு மருத்துவத் துறை அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் நீதிமன்றம் சென்று அனுமதியானை வாங்கிய பின்பும் கூட இதுவரை அவர்களை பணி நியமனம் செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் ஸ்மித் என்ற தனியார் நிறுவன உரிமையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர்.
தொடர்ந்து வேலை வாய்ப்பை இழந்து வறுமையில் வாடும் 17 நபர்களின் குடும்பங்களை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி மாவட்ட மருத்துவ அதிகாரி பாரதி ஆகியோர் இந்நிகழ்வில் தலையிட்டு உடனடியாக 17 நபர்களை மீண்டும் தூய்மை பணியில் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தூய்மை பணியாளர்கள் சங்கம் மற்றும் சிஐடியூ தொழிற்சங்கம் மற்றும் ஏனைய இயக்கங்களை இணைத்து பழனி அரசு தலைமை மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து இந்நிகழ்வில் ஸ்மித் என்ற தனியார் நிறுவனத்திற்கு அதிகாரிகள் துணை போவதாகவும் சமூகநீதி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் 10 ஆண்டுகளாக வேலை பார்த்த நபர்களுக்கு வேலை வழங்காமல் அதிகார தோரணையில் வலம் வரும் ஸ்மித் நிறுவன உரிமையை ரத்து செய்ய வேண்டும் தூய்மை பணியாளர்கள் தங்கள் உரிமைகளை கேட்டால் அவர்களை பழிவாங்கும் நோக்கில் வேலை இழப்பை ஏற்படுத்தி அலைக்கழிக்க விடுகின்றனர்.
உடனடியாக ஸ்மித் நிறுவன டெண்டரை ரத்து செய்ய வேண்டும் மீண்டும் 17 நபர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எடுத்துக் கூறினர்.
மேலும் இந்நிகழ்வில் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் ஜே பி சரவணன் கருத்தியல் பரப்புக்குழு மாநில செயலாளர் பாவேந்தன் தமிழ் தேசிய எழுச்சி பேரவை மாநில துணைச் செயலாளர் பொதினிவளவன் மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரபு மாவட்ட துணைச் செயலாளர் வாஞ்சிநாதன்
நகர செயலாளர் மணிமுத்து நகர பொருளாளர் மில்லர் மண்டேலா நகர துணை செயலாளர் ஆறுமுகம், ராஜ்குமார் எழுச்சி பாசறை ஒன்றிய செயலாளர் பார்த்திபன் நகர அமைப்பாளர் குருசாமி, நாகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
