தமிழ்நாடு
ஏழு கிராம மக்களையும் ஒன்றிணைக்கும் தளவாய்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் திருவிழா நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், தளவாய்பட்டினம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் திருவிழா பங்குனி 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கோவில் அடைத்து திருவிழா சாட்டு நடைபெற்றது. பங்குனி 24 ஆம் தேதி திங்கட்கிழமை கோவில் நீக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு மாவிளக்கு, மற்றும் சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் நேற்று சப்பாரத்தில் ஊர்வலமாக தளவாய்பட்டினம் கிராமத்து சுற்றி வந்தது. ஊர்வலம் வந்த அம்மனை ஏழு…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை விவசாய நிலங்கள் சேதம்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11/04/2025 அன்று இரவு பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் கருதுடன் கூடிய மக்காச்சோளங்கள் பாவளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 100 ஏக்கருக்கு மேல் முறிந்தும் பாய் போல் படுத்துள்ளதால் விவசாயிகள் வேதனையில் இருந்து வருகிறார்கள். தமிழக அரசும் மாவட்ட வேளாண்மை துறையும் ஆய்வு செய்து நஷ்ட ஈடு வழங்குமா என விவசாயிகள் எதிர்பார்ப்பு. கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் எல்ஐசி நிறுவனத்தின் வருடாந்திர பூஜை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் எல்.ஐ.சி துணை கிளையின் புதிய 2025-26 நிதியாண்டின் புது வணிக ஆரம்ப சிறப்பு பூஜை 11.04.2025 வெள்ளிக்கிழமை அன்று தேவபாண்டலத்தில் உள்ள அருள்மிகு பாலாம்பிகை உடனாகிய பாண்டுவனேஸ்வரர் ஆலயத்தில் காலை சரியாக 8.00 மணி அளவில் அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் நடைபெற்றது. இந்த பூஜையில் 50க்கும் மேற்பட்ட முகவர்கள்,CLIA’S, வளர்ச்சி அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள், மற்றும்.சங்கராபுரம் எல்ஐசி நிறுவனத்தின் கிளை மேலாளர் திரு S.பாலாஜி அவர்கள் தலைமையில். அனைத்து முகவர்களும்.கலந்து கொண்டு பூஜையை…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில்மாவட்ட சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின் கீழ் தேசிய பசுமைப் படை சார்பில் பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்கராபுரம், ஏப்ரல்-13 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி
நீலகிரி மாவட்ட தோட்டதொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் 61 வது பொதுப்பேரவை கூட்டம் நடைபெற்றது.
குன்னூர் மவுண்ட்ரோடு, புனித அந்தோணியார் தேவாலயம் திருமண மண்டபத்தில் ,நீலகிரி மாவட்டத்தோட்டத்தொழிலாளர் கூட்டுறவுச் சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தின் 61-வது பொதுப்பேரவைக்கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் துணைச் செயலாளர் திரு.நீலமேகம், ஆண்டறிக்கை மற்றும் ஆண்டு வரவு செலவை உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தார். சங்கத்தின் செயலாளர் திருமதி.ஜூலியட் சகாயராணி முன்னிலை வகித்தார். நீலகிரி மண்டலக் கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளர், திரு.இரா.தயாளன் அவர்கள், தலைமையேற்றார் . அவர் பேசுகையில் சர் ப்ரெடெரிக் நிக்கல்சன் அவர்களால் தான் இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் தோன்றியது. பணக்கார வியாபாரிகளின்…
வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
வக்ஃபு வாரியத்தில் இஸ்லாமிய மதத்தை சேராத இரண்டு நபர்களை சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறார்கள், திருப்பதி தேவஸ்தானத்தில் இஸ்லாமியர்களை சேர்க்க முடியுமா. வாணியம்பாடியில் நடந்த வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கேள்வி எழுப்பினார். வாணியம்பாடி, ஏப்.14- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் அருகில் ஆல் இந்தியா முஸ்லீம் பர்சனல்-லா போர்டு, திருப்பத்தூர் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை…
மதுரையில் வக்ஃபு திருத்தச் சட்டத்தை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மதுரை கோரிப்பாளையத்தில் 13.4. 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை மதுரை மாவட்டம் சார்பாக ஒன்றிய அரசு கொண்டுவந்த வக்ஃபு திருத்தச் சட்டத்தை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.. இக்கண்டன பொதுக்கூட்டத்தை மதுரை மாவட்ட சபையின் தலைவர் மௌலானா S. சதக்கத்துல்லாஹ் மன்பஈ பாஜில் ஜமாலி தலைமை தாங்கினார்கள். மேலூம் மதுரை மாவட்ட அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளும், இஸ்லாமிய இயக்க நிர்வாகிகள் மற்றும் சமுதாய முன்னோடிகளும் முன்னிலை வகித்தார்கள்….
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரில் புதியதாக பல் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரில் புதிதாக அமைந்துள்ள ஸ்ரீ வாமனா பல் மருத்துவமனை ஸ்ரீ மதுரா இம்ப்ளாண்ட் மையம் டாக்டர் சஞ்சய் குமார் செயற்கை பல் பொருத்தும் நிபுணர் மது கேஸ் ஆபீஸ் அருகில் தெற்கு வீதி திருக்கோவிலூரில். திறப்பு விழா நடைபெற்றது. திறப்பு விழாவிற்கு டாக்டர் செந்தில்குமார். அருணை பல் மருத்துவமனை திருவண்ணாமலை. துவங்கி வைத்திடவும் டாக்டர் சுகுமார்.தீபா சுகுமார்.வரவேற்றனர் இதில் சிறப்பு விருந்தினராக சின்ன சேலத்தை சேர்ந்த அரவிந்தன். பாலமுருகன். ஆதிசேஷன. திருக்கோவிலூர் சதீஷ்….
வக்ஃப் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் போராட்டம் நடைபெற்றது.
தென்காசி ஏப்ரல் – 11 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வல்லம் பகுதியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் மதியம் தொழுகை முடிந்ததும் அனைவரும் கருப்பு பேட்ச் அணிந்து இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த வகையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே வல்லம் சாகுல் ஹமீது பள்ளிவாசலில் ஜும்மா தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்கள் திமுக தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி…
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவை மாஸ்டர் பிளான் 2041 தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் பவன் குமார் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கொடிசியா தலைவர் கார்த்திகேயன் துணைத் தலைவர் ரங்கசாமி உதவி இணைச் செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் சேர்ந்து சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் உறுப்பினர் மற்றும் செயலாளர் ஜெயக்குமாரிடம் மனு ஒன்றை கழித்தினர் அந்த மனுவில் அவர்கள் கூறுகையில் நரசிம்மநாயக்கன்பாளையம், முதல் கோவில் பாளையம், வாகாரம் பாளையம், கருமத்தம்பட்டி, மற்றும்…
