தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பாவளம் கிராமத்தைச் சார்ந்த மானவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் விழா.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தனியார் திருமண மண்டபத்தில். மாநில அளவிலான இல்லம் தேடி கல்வி மையத்தின் நம்ம ஊரு கதை போட்டியில். பூட்டை மதுரா பாவளம்.கோமதி. மற்றும் அருள் மொழி. ஆகியோரின் மையங்களிலிருந்து பாவளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் 32 பேர் கலந்து கொண்டனர். இவர்களுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் பாராட்டி பாராட்டு சான்றிதழ். மற்றும் கேடயம். வழங்கினார்கள். இதனையடுத்து கோமதி.மற்றும் அருள்மொழி.ஆகிய இருவரையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட…
வாணியம்பாடி அருகே அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்தையும், நீர் தேக்க தொட்டியையும் துடைப்பம் வைத்து சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தற்காலிக பணியிட நீக்கம் செய்யப்பட்டார்.
வாணியம்பாடி, ஏப்.17- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆவாரங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் கடந்த 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பள்ளியில் உள்ள வளாகத்தையும், ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டியையும், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியையும் மாணவர்கள் துடைப்பத்தை வைத்து சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி இருந்தது. மேலும் ஆபத்தான முறையில் மேல் நீர்த்தேக்க தொட்டியை…
வாணியம்பாடியில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத அதிதீஸ்வரர் பழமை வாய்ந்த சிவன் ஆலயத்தில் இசைஞானி இளையராஜா சுவாமி தரிசனம்.
வாணியம்பாடி,ஏப்.17- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ அதிதீஸ்வரர் ஆலயத்தில் இசைஞானி இளையராஜா சுவாமி தரிசனம் செய்தார். இன்று காலை வாணியம்பாடி தேவஸ்தானம் ஊராட்சியில் உள்ள அதிதீஸ்வரர் ஆலயத்திற்கு காரில் வந்த இளையராஜா ஆலயத்தில் உள்ள தனி சன்னதியில் அமைந்துள்ள சரஸ்வதி ஆலயம் முருகர் ஆலயம் தட்சிணாமூர்த்தி ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களிலும் அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்து வழிபட்டார். மேலும் சுயம்பு ரூபமாக காட்சியளிக்கும் ஸ்ரீ அதிதீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை…
கோவை மாநகராட்சியில் வீடில்லா நாய்களுக்கு ரேபிஸ் நோயிக்கான தடுப்பூசி முகாம்
கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட ரேஸ்கோர்ஸ் சாலை, சக்தி சுகர்ஸ் அருகில், வீடில்லா நாய்களுக்கு ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி முகாமினை,மாண்புமிகு மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன், மற்றும் மண்டலத்தலைவர் மீனாலோகு, உதவி ஆணையர் செந்தில்குமரன், உதவி நகர் நல அலுவலர் மரு.பூபதி, பூங்கா…
நாள்தோறும் இந்தி திணிப்பு சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு.
என்.சி.இ.ஆர்.டி. துவங்கி எம்.பி.களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தி திணிப்பு என சு.வெங்கடேசன் குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது; ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி. ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி. என்.சி.இ.ஆர்.டி. துவங்கி எம். பி. களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்பு. இனிமேல் எடப்பாடியார் என்பதை இந்தியில்தான் நயினார் நாகேந்திரன் எழுதுவாரா? என சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார் மதுரை…
வைகிங் நிறுவனம் சார்பில் சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் நீலகிரி மாவட்ட போக்குவரத்து காவல்துறையினருக்கு நிழற்குடைகள் மற்றும் தடுப்புகள் வழங்கினர்.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் வைகிங் நிறுவனம் சார்பில் சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் நீலகிரி மாவட்ட போக்குவரத்து காவல்துறையினருக்கு நிழற்குடைகள் மற்றும் தடுப்புகள் வழங்கப்பட்டுள்ளன மழை மற்றும் வெயில் காலங்களில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் கோடை காலத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சிறப்பு காவலர்கள் அமர்ந்து கண்காணிக்கவும் இந்த நிழற்குடைகள் உதவியாக இருக்கும். இன்று காலை உதகை சேரிங் கிராஸ் பகுதியில் இந்த நிழற்குடைகளை வைக்கிங் நிறுவனம் சார்பில் மாவட்ட…
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.
வாணியம்பாடி, ஏப்.16- திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 37 மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். அப்சர் மர்வான் திருப்பத்தூர் மாவட்ட நிருபர்.
கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக சமத்துவ விழா நடைபெற்றது.
கோவை ஏப்ரல் : 14 கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சமத்துவ நாள் விழாவில், டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. சம்பத்குமார்-கோவை நிருபர்
பழனி அருகே ஆயக்குடி திமுக பேரூர் சார்பாக நீர்மோர் பந்தல்.
பழனி அருகே ஆயக்குடி திமுக பேரூர் சார்பாக ஓபுளாபுரத்தில் உள்ள திமுக அலுவலக முன்பு பொதுமக்கள் கடும் வெயிலில் பரிதவித்து வரும் நிலையில் ஆயக்குடி பேரூர் திமுக சார்பாக இலவச நீர்மோர், குளிர்பானங்கள், பழங்கள், இளநீர், ஆகியவை வழங்கும் விழா நிகழ்ச்சி பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ. செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றன.. தொடர்ந்து இந்நிகழ்வில் பேரூர் செயலாளர் சின்னத்துரை ஒன்றிய செயலாளர் சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் விழா நிகழ்ச்சி நடைபெற்றன…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சமத்துவபுரத்தில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் சங்கராபுரம் பேரூர் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் சங்கராபுரம் பேரூர் திமுக சார்பில் மு க ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாள் மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் சமத்துவபுரத்தில் நடைபெற்றது. இப்பொதுக் கூட்டத்திற்கு சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தலைமையில். வரவேற்புரை G D தயாளன். முன்னிலை ஆறுமுகம் திருநாவுக்கரசு பாப்பாத்தி நடராஜன் கம்ருதீன் விஜயகுமார் துரைராஜ் செல்லையா அருள்மொழி ஆசீர்வாதம். சிறப்புரை தலைமை கழக பேச்சாளர் ராஜேந்திர பிரசாத். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அங்கயற்கன்னி. கள்ளக்குறிச்சி…
