திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், தளவாய்பட்டினம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் திருவிழா பங்குனி 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கோவில் அடைத்து திருவிழா சாட்டு நடைபெற்றது.

பங்குனி 24 ஆம் தேதி திங்கட்கிழமை கோவில் நீக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு மாவிளக்கு, மற்றும் சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.
அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் நேற்று சப்பாரத்தில் ஊர்வலமாக தளவாய்பட்டினம் கிராமத்து சுற்றி வந்தது. ஊர்வலம் வந்த அம்மனை ஏழு கிராம மக்களும் ஒன்று கூடி தரிசித்தனர்..
தாராபுரம் செய்தியாளர் : கோபி