கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்களின் சிறப்பு வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் ‘நிமிர் – The Rising Team’ சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் ஆசாரிபள்ளம் பகுதியில் நடைபெற்றது.

திருமதி ஜெயந்தி, திருமதி சுமதி, திருமதி ஆஷா ஆகியோர் பொதுமக்களை நேரில் சந்தித்து, குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விளக்கினர். தவறான தொடுதல், பாலியல் வன்கொடுமை, குழந்தைத் திருமணம், கடத்தல், குழந்தைத் தொழிலாளர் முறை, புறக்கணிப்பு மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாக்குதல் உள்ளிட்ட குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
18 வயதுக்குட்பட்ட அனைவரும் குழந்தைகளாகக் கருதப்படுவதையும், அவர்களின் வாழ்வு, பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் பங்கேற்பு உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டியதையும் எடுத்துரைத்தனர்.
ஆபத்து அல்லது உதவி தேவைப்படும் குழந்தைகள் 1098 குழந்தைகள் உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. பெண்கள் உதவி 181, காவல்துறை 100, மருத்துவ அவசரம் 108, இணையக் குற்றங்கள் 1930 உள்ளிட்ட உதவி எண்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
