நாகர்கோவிலில் அரசு உதவித்தொகையை உயர்த்தக் கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்.
நாகர்கோவில், செப். 08: தங்களது மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தக் கோரி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் சுமார் 130 பேரை காவல்துறையினர் திங்கள்கிழமை காவலில் எடுத்தனர். கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகையான ரூ.1,500 தொடர்ந்து சரிவர வழங்கப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. எனவே, அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திற்கு இணையான வகையில் தங்களின் உதவித்தொகையை ரூ.6,000…
