தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நிறைவு நாளில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்தக திருவிழா நிறைவு நாளில் புத்தக அரங்கிற்கு மாற்றுத்திறனாளிகள் தடையின்றி வந்து செல்ல சக்கர நாற்காலி மற்றும் உதவியாளர் ஏற்பாட்டிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலகத்திற்கு நினைவு பரிசு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது. மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி.
ஜாக்டோ ஜியோ சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க உத்தரவிட கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல்.
பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் என்ன? – நீதிபதிகள் கேள்வி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மறியல் போராட்டம் நடத்துவது சட்ட விரோதம் தடை செய்ய வேண்டும் – மனுதாரர். ஒருநாள் அடையாள போராட்டம் தானே, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வளாகத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினால் என்ன? – நீதிபதிகள் கேள்வி அரசு தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவு. செய்தியாளர் சின்னத்தம்பி.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுறத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சென் ஜோசப் பள்ளியில் கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் பிரசாத் மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் சங்கராபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜா ரமணி அவர்களின் கணவர் துரைதாக பிள்ளை மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் அவருடைய மகன் கதிரவன் மற்றும் சங்கராபுரம் வார்டு உறுப்பினர்கள் தேவபாண்டலம் தலைவர் கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணியன்…
செங்கோட்டையில் ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வல்லம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மகேஷ் என்ற நாய் மகேஷ் ரவுடி பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் அடிக்கடி குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவரை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு அரவிந்த் அவர்களின் பரிந்துரைப்படி மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு கமல் கிஷோர் உத்தரவுப்படி செங்கோட்டை காவல் ஆய்வாளர் K.S. பாலமுருகன் மேற்படி ரவுடி மகேஷ் என்ற நாய் மகேஷை குண்டர் தடுப்பு சட்டத்தில்…
உளுந்தூர்பேட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஆதிலட்சுமி திருமண மண்டபத்தில் அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள ராஜாத்ரி நேத்ராலயா கண் மருத்துவமனை மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு அவர்கள் தலைமையேற்று குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமராஜ் முன்னாள் எம்எல்ஏ பிரபு…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் மாணவர்களின் பட்டமளிப்பு விழா மிக சிறப்பாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. இதில் பள்ளி தாளாளர் திரு டி பி சந்திரசேகரன் அவர்களும் துணைத் தலைவர் திரு பி ஏ மகேந்திரன் அவர்களும் செயலாளர் திரு டி பட்டு ராஜன் அவர்களும் மற்றும் உறுப்பினர் திரு பால்ராஜ் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டமளித்து பாராட்டினர் இவ்விழாவில் பள்ளி முதல்வர் திரு சுந்தரபாண்டியன் அவர்களும் மாணவ மாணவிகளும்…
திருநெல்வேலியில் நடைபெற்ற, இல்லக் குழந்தைகளுக்கான உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல்கள் குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சி! மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.சுகுமார், துவக்கி வைத்தார்!
திருநெல்வேலி,பிப்.22:- நெல்லை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக, திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியிலுள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இல்லக் குழந்தைகளுக்கான உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல்கள் குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சி, இன்று [பிப்.22] நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.சுகுமார், துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- “திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலமாக, இல்லக் குழந்தைகள் மற்றும் 2019-ஆம் ஆண்டு நிகழ்ந்த “கொரனா” தொற்று காரணமாக பெற்றோர் அல்லது…
நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுக்கா அதிகரட்டி அரசு மேல்நிலை பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
குன்னூர் தாலுக்கா அதிகரட்டி பேரூராட்சி அதிகரட்டி நெடிக்காடு பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறப்பு மேம்பாட்டுத்திட்டம் (SADP) 2021 மதிப்பீடு ரூபாய் 144.00 லட்சம் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறை மற்றும் உயர்நிலை அறிவியல் ஆய்வக கட்டிடத்தை தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சி தமிழக அரசு தலைமை கொறடா கா .ராமச்சந்திரன் தலைமையில் குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா முன்னிலையில் நடைபெற்றது பள்ளியின் தலைமை…
மதுரையில் மது போதையில் நடு ரோட்டில் அட்டகாசம் போதை ஆசாமி.
மதுரையில் நடு ரோட்டில் போதையில் அட்டகாசம் செய்த போதை ஆசாமி யால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது சாலையில் படுத்து உருண்டு கொண்டு இருந்தால் பஸ் போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்பட்டது அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட திடீர் நகர் காவல் நிலையத்தை சேர்ந்த SI சுரேஷ் குமார் போதை ஆசாமி மீட்டு உயிரையும் காப்பாற்றினார். பின்னர் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது பொதுமக்களுக்கு அச்சமும் குறைந்தது போதை ஆசாமியை உயிரை காப்பாற்றிய எஸ்ஐ சுரேஷ்குமாருக்கு அப்பகுதி…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.
கல்லை மாவட்ட முத்தமிழ்ச் சங்கம் சார்பாக உலக தாய்மொழி நாள் விழா தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது, நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர் ஞானமூர்த்தி தலைமை தாங்கினார்,முத்தமிழ்ச் சங்கத் தலைவர் முருககுமார் வரவேற்புரையாற்றினார், பள்ளி உதவி தலைமையாசிரியர் சென்னம்மாள்,பாண்டலம் ஊராட்சி மன்றத் தலைவர் பாப்பாத்தி நடராசன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அண்ணாமலை, கார்குழலி அறக்கட்டளைத் தலைவர் தாமோதரன், தமிழ்ப்படைப்பாளர் சங்க துணைத்தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு…
