தமிழ்நாடு
திருநெல்வேலியில், புலிகள் அமைப்பின் முதன்மை தளபதி திலீபனின், 37- ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி அனுசரிப்பு..!
தமிழீழ விடுதலைப் போர் 1987-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், மிக உச்சத்தில் இருந்த நிலையில், திடுமென இந்திய அப்போதைய பிரதமர் மறைந்த ராஜீவ்காந்தி அதில் தலையிட்டு, இலங்கையின் அப்போதைய குடியரசு தலைவர் ஜெயவர்த்தனாவோடு ஓர் ஒப்பந்தம் போட்டு, “இரு தரப்பாருக்கும் இடையே, அமைதியை நிலைநாட்ட போகிறோம்!” என அறிவித்து, இந்திய படையை அங்கே அனுப்பி வைத்தார். ஆனால், ஒப்பந்தப்படி இலங்கை அரசு நடக்காமல், ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும், அப்பாவி பொதுமக்கள் மீதும், ராணுவ…
மு.க.ஸ்டாலின் விருது பெற்ற மூத்த தலைவரரை, சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்க்ள்…
இன்று (26.09.25) கடந்த வாரம்,கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் மு. க. ஸ்டாலின் விருதுபெற்ற ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் முன்னாள் செயலாளரும், திமுக சொத்துப் பாதுகாப்பு குழுத்துணைத்தலைவருமான திரு.பொங்கலூர் ந. பழனிசாமி, அவர்களை, மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளரும், மாநகராட்சி கல்விக்குழு தலைவருமான திருமதி, மாலதி அவர்கள், தலைமையில் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்
மதுரையில் விசாரணைக்கு அழைத்து சொல்லப்பட்ட சிறுவன் கொலை வழக்கில் தீர்ப்பு…
மதுரை, எஸ்.எஸ் காலனி காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிரிழந்த வழக்கு காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை. மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு உடற் கூராய்வின்போது காயங்களை மறைத்த அரசு மருத்துவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவு தனது மகன் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிறுவனின் தாய் தொடர்ந்த வழக்கில் உத்தரவு மதுரை மாவட்ட செய்தியாளர் – சின்னத்தம்பி
அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களை செல்போனில் வீடியோ எடுத்த – மின் வாரிய வணிக பிரிவு ஆய்வாளர் கைது..!
மதுரை: சமயநல்லூர் மின் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களை கழிப்பறை ஜன்னல் வழியே செல்போனில் வீடியோ எடுத்த மின் வாரிய வணிக பிரிவு ஆய்வாளர் ராஜராஜேஸ்வரன்(33) கைது. அவரது செல்போனை வாங்கி பார்த்தபோது அலுவலகத்தில் பணிபுரியும் பல பெண் ஊழியர்களின் வீடியோக்கள் இருந்தது கண்டறியப்பட்டது அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை. மதுரை மாவட்ட செய்தியாளர் – சின்னத்தம்பி
குடிகார தந்தையை கொன்ற மகன்..!
மதுரையை சேர்ந்த கண்ணன் என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார். கண்ணன் தினசரி மது அருந்திவிட்டு மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இதே போன்று மது போதையில் தனது மனைவியிடம் சண்டையிட்ட நிலையில் 9 வயது சிறுவனான கண்ணனின் மகன் வீட்டில் இருந்த கத்தரிக்கோலை தூக்கி வீசியபோது எதிர்பாராத விதமாக கண்ணன் உடலில் பட்டு கண்ணன் உயிரிழந்தார். மதுரை மாவட்ட செய்தியாளர் – சின்னத்தம்பி
காளிகேசம் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை – வனத்துறை அறிவிப்பு..!
செப் 26 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் காளி கேசம் பகுதியில் கடந்த சில நாட்களாக இடையறாத மழை பெய்து வருவதால் ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றின் ஓட்டம் வேகமாக இருந்து, சுற்றுலா பயணிகளின் உயிர் பாதுகாப்பு தரப்பில் அதிக ஆபத்து நிலவுகிறது. இதனை முன்னிட்டு, இன்று காளி கேசம் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என வனத்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக விதிகளை மதித்து…
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் ஹரி பிரியாணி நிறுவனத்தாரின் மூன்று அவசரகால ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா…
தென்காசி : செப் – 26 – தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பிரபல ஹரிபிரியாணி நிறுவனத்தாரின் அவசரகால ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா மற்றும் ஹரிபிரியாணி நிறுவனத்தின் ஒன்பதாம் ஆண்டு துவக்க விழா என இருபெரும் விழா சாம்பவர் வடகரை அருள்மிகு ஸ்ரீ இராமசாமி திருக்கோவில் வளாகத்தில் வைத்து மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்து நாடார் உறவின்முறை கமிட்டி நிர்வாகிகள் தலைமை வகித்தனர். சாம்பவர் வடகரை முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் வி .பி…
விழுப்புரம் மாவட்டம் ஆட்சித் தலைவர் நிதி வழங்கினார்..
விழுப்புரம் மாவட்டம் மாவட்டஆட்சித் தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹமான்..இ.ஆ.ப. அவர்கள் இன்று 10:30 மணி அளவில் சாலை விபத்தில் உயிரிழந்த மூவேந்தர் நகர் தனலட்சுமி கார்டன் உள்ள திருமதி சிவரஞ்சனி அவர்களின் குடும்பத்தின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் .3. லட்சம் காசோலை வழங்கினார். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் – அந்தோணிசாமி
திமுகவின் அதிரடி மாற்றம்…
திமுகவின் தேர்தல் பரப்புரை… மற்றும். ஓரணிய்ல்தமிழ்நாடு… பரப்புரையை முன்னெடுக்காத மாவட்ட செயலாளர்களை கடுமையாக எச்சரித்துள்ளார். அந்த வகையில் கோவை மாவட்ட செயலாளர். Ex. M.L.A.நா.கார்த்தி க். அவர்களை மாவட்ட செயலாளர் பதவியில்இருந்து. திரு. துரைமுருகன் அவர்கள். நீக்கி உள்ளார். புதிதாக. துறை. செந்தமிழ் செல்வன். புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திரு. கார்த்திக்.அவர்களுக்கு.திமுக தீர்மான குழு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். செய்தியாளர் – P. தினேஷ்
முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பிறந்த நாள் நினைவஞ்சலி…
செப் 26, கன்னியாகுமரி – நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் லூர்தம்மாள் சைமன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில், குமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் V. விஜய் வசந்த் MP அவர்கள் லூர்தம்மாள் சைமன் அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்போது, மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார் MC, நாகர்கோவில் மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் செல்வகுமார் பாலச்சந்திரன்…
