தமிழ்நாடு
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் திமுக சார்பில் உறுதிமொழி கூட்டம்…
செப்டம்பர் 20 மாவட்ட வாரியாக ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டங்கள் நடத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவு! திமுகழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று (09-09-2025) காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. அதில், திமுகழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: கடந்த பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில்,படுபாதாளத்துக்குப் போன தமிழ்நாட்டின் வளர்ச்சியை மீட்டெடுத்து, 11.19 விழுக்காட்டு வளர்ச்சியோடு, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக நம் திராவிட மாடல் ஆட்சியில் உயர்த்தியிருக்கிறோம். இதன் அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு…
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்கிட ஆராய குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
திருப்பூர் : செப்டம்பர்.10 அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என ஆராய குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 1962 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் தொடங்கப்பட்டது. இந்த ஆலை தினசரி 1,250 மேற்பட்ட டன் மற்றும் ஆண்டுக்கு சுமார் 2.14 லட்சம் மெட்ரிக் டன் அரவை செய்யும் திறனுடன் தொடங்கப்பட்டது. இந்த ஆளை வளாகத்தில் தினசரி 55 ஆயிரம் லிட்டர்…
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் கல்விக் கடன் முகாமில் கலந்து உரையாற்றினார் :
செப் 10, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். அழகுமீனா அவர்கள் இன்று (10.09.2025) கோணம் அரசு பொறியியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற மாபெரும் கல்விக் கடன் முகாமில் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களிடம் உரையாற்றினார். இம்முகாமில் வங்கிகள் மூலம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், கல்விக் கடன் பெறும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பல்வேறு துறை அதிகாரிகள், வங்கி மேலாளர்கள், பேராசிரியர்கள் மற்றும்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் ஒன்றியத்தில் பொதுமக்கள் சாலை மறியல் !
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மூன்றாவது வார்டு ல்150.க் மேற்பட்டோர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தாத காரணத்தினால் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர் ஒரு குடும்பத்தில் நான்கு நபர் இருந்தாலும் ஒருவருக்கு மட்டும் தான் இத்திட்டத்தின் கீழ் வேலை செய்யலாம் அந்த ஒரு நபர் கூட 100 நாள் திட்டத்தின் கீழ் வேலை பொதுமக்கள் வங்கிக் கணக்கில் பணம் ஏறவில்லை என்று இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்…
பொங்கலுக்கு இலவச வேஷ்டி–சேலை தயாரிப்பு வேகமாக தொடக்கம் :
செப் 10 கன்னியாகுமரி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வேஷ்டி மற்றும் சேலை வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் தமிழகத்தில் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு பயனளிப்பதோடு, கைத்தறி நெசவாளர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்குகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள பெரிய அரசுங்கன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு வேஷ்டிகள் நெய்யப்பட்டு வருகின்றன. கைத்தறி தொழிலாளர்கள் பல வாரங்களாக உழைத்து வந்த நிலையில்,…
கற்கள் வைத்து சாலை மறைப்பு – பொதுமக்கள் அவதி !
9 செப்டம்பர் 2025 குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் செந்தூரன் நகர் பகுதியில், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கியச் சாலையில் காங்கிரீட் செப்பனிடும் பணிக்காக கற்கள் வைத்து சாலை மறிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கல்விக் கூடம் மற்றும் மருத்துவமனை அமைந்துள்ள அச்சாலை, பொதுமக்கள் தினசரி அதிகம் பயன்படுத்தும் முக்கியப் பாதையாகக் கருதப்படுகிறது. ஆனால் கற்கள் வைத்து வழி மறைத்ததால், பொதுமக்கள், மாணவர்கள், நோயாளிகள் செல்லும் வாகனங்கள் கூட இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள்…
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் சரவணபாக்கம் என்ற கிராமத்தின் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவருக்கு பலத்த காயம்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் சரவணபக்கம் கடலூர் பெங்களூர் செல்லும் ஹைவே சாலை உள்ளது அருகாமையில் நடுநிலைப்பள்ளி ஏங்கி வருகிறது அங்கு வேகத்தடை இல்லாத காரணத்தினால் வாகனங்கள் வேகமாக செல்கிறது. பொதுமக்கள் பல மாதங்களாக வேகத்தடை அமைக்க கோரி புகார் அளித்துள்ளார் இன்றுவரையிலும் வேக தடை அமைக்கவில்லை நடுநிலைப்பள்ளி விட்டு வெளியே வரும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை இன்று படிப்பை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தந்தை குழந்தையை வீட்டுக்கு கூட்டி செல்லும்போது அவ்வழியாக வந்த மற்றொரு இருசக்கரம்…
குளச்சலில் டாஸ்மார்க் கடை மாற்ற கோரி இளைஞர் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்.
குளச்சலில் டாஸ்மார்க் கடை மாற்ற கோரி இளைஞர் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகரில் பயணியர் விடுதி அருகே செயல்பட்டு வரும் டாஸ்மார்க் மதுக்கடை மற்றும் பார் காரணமாக பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதனை அகற்ற கோரி, இளைஞர் காங்கிரஸார் குளச்சல் பேருந்து நிலையம் அருகில் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். இந்த இயக்கத்தின் மூலம் மதுவின் தீமையை மக்களுக்கு எடுத்துரைப்போம் என்றும், சேகரிக்கப்பட்ட கையெழுத்து மனுவை தமிழக முதல்வரிடம் நேரடியாக…
விரைவில் புற்றுநோய் கதிர் சிகிச்சை மையம்!
செப் 9 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய் கதிர் சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கருவிகள் ஏற்கனவே மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ளன. கதிர்வீச்சு பொருட்கள் மும்பையில் இருந்து வரவுள்ளன. இவ்வருட இறுதிக்குள் சிகிச்சை மையம் செயல்படத் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மாவட்ட மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை அருகிலேயே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
குமரியில் காற்றாலை மின் உற்பத்தி உயர் நிலைக்கு!
செப் 9 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று பலமாக வீசுவதால் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. குமாரபுரம், ஆரல்வாய்மொழி, காவல்கிணறு, செண்பகராமன் புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள காற்றாலைகள், தற்போது அதிகபட்ச திறனில் இயங்கி வருகின்றன. 230 கிலோவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய காற்றாலைகள், தற்போது 220 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், மாவட்டத்தில் மின் உற்பத்தி அதிகரித்து மின் தேவைகளை பூர்த்தி செய்வதில் பெரிதும்…
