தமிழ்நாடு
தென்காசி அருகே கோர விபத்து இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் ஆறு பேர் பலி 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.
தென்காசி நவம்பர் 24 தென்காசி அருகே உள்ள கடையநல்லூர் அடுத்துள்ள இடைகால் அருகே இன்று காலை 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் தென்காசி அரசு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு காவல்துறை விரைந்து விசாரணை நடத்தி வருகிறது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற…
உடுமலை மூணாறு சாலையில் கம்பீரமாக நடந்து வந்த ஒற்றை காட்டு யானையின் வீடியோ வைரல் – சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரிக்கை…!
உடுமலைநவம்பர் 22. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது சுற்றுலாத்தலமான மூணாறு இந்த பகுதிக்கு நாள்தோறும் வெளியூர் மற்றும் வெளி மாவட்டம் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த சுற்றுலா பயணிகள் உடுமலை மூணாறு செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளதால் இந்த வனப் பகுதியில் இருந்து அடிக்கடி வனவிலங்குகள் வெளியேறி தண்ணீர் அருந்துவதற்காக சாலையை கடந்து செல்வது வழக்கம் குறிப்பாக யானைகளில்…
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிதிட்ட பணிபுரியும் பயனாயாளர்களுக்கு சமையல் எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்..
உடுமலைநவம்பர் 22. உடுமலை அருகே உள்ள குறுஞ்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி உடுமலை பாரத் கேஸ் ஏஜென்சீஸ் விநியோகஸ்தரான செல்வி கேஸ் சார்பில் குறுஞ்சேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணியாற்றும் (100 நாள் வேலை) பயனாளர்களுக்கு கிராம விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் எரிவாயு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பரமேஸ்வரி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற செயலாளர்…
சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் சபரிமலை அன்னதான ஆரம்ப விழா முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் துவக்கி வைத்தார்…
சுசீந்திரம்; நவ.22:- அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் சபரிமலை விழாக்கால அன்னதான ஆரம்ப விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான திரு. என். தளவாய்சுந்தரம் அன்னதானத்தை துவக்கி வைத்தார். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த அன்னதானம், இவ்வருடம் நவம்பர் 21 முதல் ஜனவரி 15 வரை—தினமும் நடைபெற உள்ளது. ஐயப்ப பக்தர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதி வழங்கி வருவது பாராட்டத்தக்க தொண்டாக இருப்பதாக அவர் தெரிவித்தார்….
திருநெல்வேலி மாவட்ட கடலோர கிராமங்களின், மீனவ சங்கத்தினருக்கு 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான, டிராக்டர்கள் வழங்கிய, மாவட்ட ஆட்சித்தலைவர்!
திருநெல்வேலி,நவ.22:- நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், இன்று (நவம்பர்.22) காலையில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சி ஒன்றில், இம்மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களான, ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம், விஜயாபதி ஊராட்சி “தோமையர் புரம்” மீனவ சங்கத்தினருக்கும், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், செட்டிகுளம் ஊராட்சி, “பெருமணல்” மீனவ சங்கத்தினருக்கும், தலா 14 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 டிராக்டர்களை, திருநெல்வேலி “நாடாளுமன்ற உறுப்பினர்” வழக்கறிஞர் செ. ராபர்ட் புரூஸ் முன்னிலையில், “மாவட்ட ஆட்சித்தலைவர்”…
மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் சிட்டிங் கைபந்து போட்டி – நாகர்கோவில் கோணத்தில் விழாக்கோலத்தில் துவக்கம்..
நாகர்கோவில்:குமரி பாராலிம்பிக் எம்பவர்மென்ட் சார்பில் மாநில அளவிலான சிட்டிங் கைபந்து போட்டி நாகர்கோவில் கோணம் பகுதியில் இன்று சிறப்பாக நடைபெற்றது. மொத்தம் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 16 அணிகள் கோவை, கன்னியாகுமரி, இராமநாதபுரம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்டவை—இந்தப் போட்டியில் பங்கேற்றன. விஜய் வசந்த் எம்.பி போட்டியை துவக்கி வைத்தார்.., குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி இந்த போட்டியை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், அவர் போட்டியாளர்கள்…
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அகஸ்தியர்பட்டியில், “நலம் காக்கும் ஸ்டாலின்”சிறப்பு மருத்துவ முகாம்! நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு, பயன் பெற்றனர்!
திருநெல்வேலி,நவ.22:- தமிழ்நாடு “முதலமைச்சர்” முக ஸ்டாலின், சென்னை மயிலாப்பூரில் இந்த ஆண்டு {2025} ஆகஸ்ட் மாதம், 2- ஆம் தேதி துவக்கி வைத்த, “நலம் காக்கும் ஸ்டாலின்!” “சிறப்பு மருத்துவ முகாம்” ஒவ்வொரு சனிக்கிழமையும், அந்தந்த மாவட்டங்களில், நடைபெற்று வருகிறது. அதன்படி, திருநெல்வேலி புறநகர் வட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள, “அகஸ்தியர்பட்டி” தனியார் பள்ளி வளாகத்தில், இன்று { நவம்பர்.22} இந்த முகாம் நடைபெற்றது. இதில், அடிப்படை மருத்துவ பரிசோதனைகள், உயர்நிலை மருத்துவ பரிசோதனைகளான உயர் ரத்த அழுத்தம்,…
விழுப்புரம் மாவட்ட காவல் துறை சிறப்பாக பணி செய்த காவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்..
விழுப்புரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் புற காவல் நிலையத்தில் பணி புரியும் தலைமை காவலர் திரு.ராஜசேகர் என்பவர் இரவு (20.11.2025) அன்று பணியில் இருந்த போது திருவண்ணாமலை பேருந்துகள் நிற்கும் தடத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த சிறுவனை புறகாவல் நிலையம் அழைத்து வந்து சோதனை மேற்கொண்டதில் கஞ்சா பொட்டலங்கள் என தெரியவந்தது. மேலும் சிறுவனிடம் இருந்து சுமார் 350 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றி சிறார் நீதிமன்றத்தில்…
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில், 19 கோடி ரூபாய் மதிப்பிலான, வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், துவக்கியும் வைத்த சபாநாயகர் அப்பாவு! நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் பங்கேற்பு!
திருநெல்வேலி,நவ.22:- தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு. அப்பாவு, நேற்று {நவம்பர்.21} காலையில், தன்னுடைய சொந்த தொகுதியான, திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில், “கூட்டப்புளி” மீனவக் கிராமத்தில், 1 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பிலான, “கடல் பொருட்கள் மதிப்புக்கூட்டு மையம் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனம்” அமைக்கும் பணி,”கூத்தன்குழி” மீனவக்கிராமத்தில், 2 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பிலான “மீன் இறங்கு தளம்” அமைக்கும் பணி, “விஜயாபதி” மீனவக் கிராமத்தில், 14 கோடியே…
பெரியகாடு மீனவர்களின் சிறப்பு பிரார்த்தனை.. உலக மீனவர் தினத்தை முன்னிட்டு கடல் அன்னைக்கு மலர் தூவி வழிபாடு…
கன்னியாகுமரி மாவட்டம் பெரியகாடு கிராமத்தில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மீனவர்கள் இன்று அதிகாலை சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். கடலில் இறங்கும் முன் தங்களின் படகுகளை அர்ச்சித்து, கடல் அன்னைக்கு மலர் தூவி வழிபாடு நடத்தினர். கடல் பாதுகாப்பிற்கான மரபு வழி பிரார்த்தனையில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டனர். ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று மாயமாகும் மீனவர்களை மீட்க தனிச்சிறப்பான ஹெலிகாப்டர் மீட்பு தளம், கடல் ஆம்புலன்ஸ் சேவை ஆகியவற்றை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என மீனவர்கள்…
