தமிழ்நாடு
சுகாதாரச் சீர்கேடு: உயிருக்கு உலை வைக்கும் உணவகம்? நாகர்கோவிலில் பரபரப்பு!
நாகர்கோவில், டிசம்பர் 11: குமரி மாவட்டம், வெட்டூர்ணிமடம் – கிறிஸ்து நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ‘ஹோட்டல் அஸ்பி’ (Hotel Asbie) உணவகம், பொதுமக்களின் உயிருடன் விளையாடும் வகையில் செயல்பட்டு வருவது அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு பொதுமக்களின் உடல்நலனைப் பாதிக்கும் வகையில் தரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாகவும்; குடிநீர் கேன்கள், உணவு பரிமாறும் பாத்திரங்கள் மற்றும் கைகழுவும் இடங்கள் ஆகியவை மிகவும் சுகாதாரமற்ற நிலையில் பராமரிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் உணவருந்த வரும்…
கோவையில் நடைபெறவுள்ள BSNL, DOT ஓய்வூதியர் சங்கத்தின் 5-வது அகில இந்திய மாநாடு – நாகர்கோவிலில் விளக்க வாயிற்கூட்டம்!
நாகர்கோவில், டிசம்பர் 11: அகில இந்திய BSNL மற்றும் DOT ஓய்வூதியர் சங்கத்தின் (AIBDPA) 5-வது அகில இந்திய மாநாடு, கோயம்புத்தூர் மாதம்பட்டியில் உள்ள லோட்டஸ் மஹாலில் வரும் 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் முதல் நாளான டிசம்பர் 17 அன்று காலை 8.00 மணிக்குக் கொடி மற்றும் ஜோதி பயணங்களுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. காலை 9.00 மணிக்குக் கொடியேற்றத்தைத் தொடர்ந்து, 9.15 மணியளவில் தேசிய ஓய்வூதியர்…
அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக்கல்லூரியில் இலவச கட்டணமில்லா கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
அருள்மிகு தண்டாயுதபானி சுவாமி திருக்கோயிலின் கட்டுப்பாட்டில் செயல்படும் அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக்கல்லூரியில் தமிழக அரசின் சட்டமன்ற அறிவிப்பின் படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மான்புமிகு திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் துவங்கி வைத்த திட்டத்தின் கீழ் பாலிடெக்னிக்கல்லுாரியின் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் இலவச கட்டணமில்லா கண்சிகிச்சை முகாம் வாசன் ஐ கேர் நிறுவனத்தால் 09.12.2025 அன்று கல்லுாரியில் நடைபெற்றது. இம்முகாமில் திருக்கோயில் இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர் அனுமதியின் பேரில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) திரு.அ.ரமேஷ், அவர்கள்…
பழனியில் அன்னை சோனியா காந்தியின் பிறந்தநாள் விழா…
திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் அன்னை சோனியா காந்தியின் திருவுருவப்படம் வைத்து பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றன. இந்நிகழ்வின் தலைமையாக நகர தலைவர் முத்து விஜயன் மண்டல தலைவர் வீரமணி வரவேற்புரையாக மாநில பொறுப்பாளர் சாய்ரா பானு பேராசிரியர் கனகராஜ் மாவட்டத் துணை தலைவர் முருகானந்தம்…
பழனியில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படும் குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடாமல் பயன்பாடில்லாத பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதை கண்டித்து நீர்வளத்துறை அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனி : டிசம்பர், 10 பழனியருகே வமதமாநதியில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படும் குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடாமல் பயன்பாடில்லாத பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதை கண்டித்து விவசாயிகள் நீர்வளத்துறை அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது வரதமாநதி அணை. இந்த அணை நிரம்பியநிலையில் தற்போது உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரதமாநதி அணை நீர் மூலம் பாசன வசதி…
அல் அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை பாராட்டிய அமைச்சர்…
மதுரை, தமுக்கம் மைதானத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக உணவுத் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் அல் அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இக்கண்காட்சிக்கு வருகை புரிந்த பத்திர பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி மூர்த்தி அவர்கள் மாணவர்களையும் ஆசிரியர் நூருல்லாஹ்வையும் பாராட்டினார்கள் மதுரை மாவட்ட செய்தியாளர்: சின்னத்தம்பி.
கன்னியாகுமரி கடற்கரையில் புதிய புறக்காவல் நிலையம் மற்றும் ‘குமரிக்காவலன்’ திட்டம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்!
கன்னியாகுமரி, டிசம்பர் 8 கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கிலும் கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட காவல்துறை புறக்காவல் நிலையம் இன்று திறக்கப்பட்டது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கு. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில், கன்னியாகுமரி காவல் ஆய்வாளர் திரு. சுந்தர்ராஜ் பெருமாள் வரவேற்புரை ஆற்றினார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மதியழகன் நிகழ்ச்சியை அறிமுகம் செய்து வைத்தார். இணையக்…
காவல்துறை–ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்து இணைந்து நடத்திய போக்சோ விழிப்புணர்வு கூட்டம்.
கன்னியாகுமரி, டிசம்பர் 7: கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் கோட்டார் கிளை இணைந்து நடத்தும் “நிமிர்” திட்டத்தின் கீழ் போக்சோ சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் இன்று மாலை கோட்டார் Y.M.J அலுவலக மேல் தளத்தில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின், IPS அவர்களின் வழிகாட்டுதலின் படி, நிமிர் பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளர் இன்ஸ்பெக்டர் திருமதி சாந்தகுமாரி (AHTU), நாகர்கோவில் உமன் போலீஸ் பிரிவு தலைமை காவலர் ஜெயந்தி, ஆஷா…
விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் டிசம்பர் 6 தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு பணிகள் தீவிரம்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் IPS., அவர்களின் உத்தரவின் பேரில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம் மற்றும் விக்கிரவாண்டி ஆகிய உட்கோட்டங்களில் இன்று மறைமுக நாசவேலை தடுப்பு பிரிவினர் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வெங்கடேசன் தலைமையிலான காவலர்கள் மற்றும் மோப்பநாய் ராணி உதவியுடன் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் போடக்கூடிய இடங்கள், நகர்ப்புற முக்கிய இடங்கள் வழிபாட்டுத் தலங்கள் ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டனர்.
பாபர் மசூதி இடிப்பு நாள்: உடுமலையில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்.!
உடுமலை : டிசம்பர், 06. டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் தகர்ப்பு 33 ஆண்டுகால அநீதி வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காப்போம் என்ற முழக்கத்தோடு அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரையை கையில் ஏந்தி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் SDPI கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி உடுமலை நகரம் சார்பாக உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு மக்கள் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு உடுமலை சட்டமன்ற தொகுதி தலைவர் M.காதர்…
