தமிழ்நாடு
திருநெல்வேலியில், போதை பொருட்களுக்கு எதிராக, மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய, மாநகர காவல் துறையினர்!
திருநெல்வேலி,நவ.21:-திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனாஉத்தரவின்படி, மாநகர காவல் துணை ஆணையர்கள் V.கீதா, G.S.அனிதா (தலைமையிடம்) மற்றும் S.விஜயகுமார் (கிழக்கு) ஆகியோரின் மேற்பார்வையில், திருநெல்வேலி மாநகர எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளில், தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், இன்று திருநெல்வேலி சந்திப்பு காவல் ஆய்வாளர் பொன்ராஜ், சந்திப்பு ம.தி.தா இந்துககல்லூரி மேல்நிலைப் பள்ளியிலும், தச்சநல்லூர் காவல் ஆய்வாளர் முத்துகணேஷ், தச்சநல்லூர் வேதிக் வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர்…
“திருநெல்வேலி மாவட்ட மக்கள் எப்போதும் காய்ச்சிய தண்ணீரையே, பருக வேண்டும்!”- சீதபற்பநல்லூரில் நடைபெற்ற, மக்கள் தொடர்பு முகாமில் பேசிய, மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்!
திருநெல்வேலி,நவ.21:- திருநெல்வேலி மாவட்டம், அபிஷேகப்பட்டி அருகேயுள்ள, “சீதபற்பநல்லூர்” கிராமத்தில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன், நேரடியாக பங்கேற்ற மக்கள் தொடர்பு முகாம், நடைபெற்றது. இங்குள்ள, “சமத்துவ புரம்” சமுதாயக்கூடத்தில் வைத்து நடைபெற்ற இந்த முகாமில், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை தோட்டக்கலைத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், மகளிர் திட்டம்,சமூக பாதுகாப்புத்திட்டம்,வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித்திட்டம்,…
வாணியம்பாடியில் ஆலயத்திற்கு சொந்தமான கடையை காலி செய்யக் கூறியதால் வாடகை தாரார் குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.
வாணியம்பாடி,நவ.21- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சி.எல். சாலையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்திற்கு சொந்தமான ஆலய வளாகத்தில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் வாடகைக்கு இருக்கும் ஒரு நபர் தன்னுடைய கடையை நிர்வாகத்தினர் கடந்த ஆறு மாதமாக காலி செய்ய கூறுவதாகவும் தான் தொடர்ந்து வாடகை செலுத்தி வரும் நிலையில் தன்னால் காலி செய்ய இயலாது என்று கூறி குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த…
பழனியில் 50 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்.
பழனியில் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியிப் குட்கா விற்பனை செய்வதாக பழனி டி.எஸ்.பி தனன்ஜெயன் அவர்களுக்கு கிடைக்கப்பட்ட ரகசிய தகவலின் பெயரில் அவர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் குட்கா மற்றும் விமல் பாக்கு விற்பனை செய்த மூன்று பேர் கைது மேலும் அவர்களிடம் இருந்து 50 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் இதுகுறித்து காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் உத்தரவின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூளைச்சாவு அடைந்த நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, உடல் உறுப்புகளை தானமாக தந்தவரின் உடலுக்கு, மலர்மாலை வைத்து மரியாதை செலுத்திய, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்!
திருநெல்வேலி – நவ 21:- திருநெல்வேலியை சேர்ந்த தங்கப்பாண்டியன் [வயது.40]. இவர் மனைவி பெயர் பார்வதி , இந்த தம்பதிகளுக்கு ஒரே ஒரு மகன் உண்டு. இவர் மும்பையில் உள்ள, அவருடைய அப்பா உணவகத்தில், உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர், மும்பையில் இருந்து தன்னுடைய சொந்த ஊரான, திருநெல்வேலிக்கு வந்த போது, கடந்த 18-ஆம் தேதி அன்று, இரவு 11 மணியளவில், சந்திப்பு ரயில் நிலையம் அருகில், எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதில் இவருடைய தலையில்…
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் .ஏ.கே.கமல் கிஷோர் கள ஆய்வு மேற்கொண்டார்.
அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, சிவகிரி, சங்கரன்கோவில், வீரகேரளம்புதூர். செங்கோட்டை, தென்காசி, ஆலங்குளம் ஆகிய தாலுகாக்களைத் தொடர்ந்து, இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடிக்குறிச்சி ஊராட்சிமன்ற அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு…
உடுமலை அருகே ஜி.டி.என் என்டர்பிரைசஸ் நூற்பாலையில் நள்ளிரவில்பயங்கர தீ விபத்து தொழிலாளர்கள் அலறி அடைத்து ஓட்டம் – உறவினர்கள் புகார் !
திருப்பூர் உடுமலை அருகே இந்திரா நகர் பகுதியில் ஜிடிஎன் என்டர்பிரைசஸ் நூற்பாலை உள்ளது இங்கு தினமும் இரவு மற்றும் பகல் நேர நேரங்கள் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் .இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் மின் கசிவு காரணமாக பஞ்சு மற்றும் பேல்கள் இருந்த கட்டிடம் பகுதியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனால் நூற்பாலையில் இரவு நேர பணியில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அங்கும் இங்கும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர் சுமார்…
உடுமலை அருகே மலை கிராமத்தில் கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கி வரும் காட்சிகள் தொடரும் அவலம் – பாதை அமைக்க வலியுறுத்தல்.
உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், பொறுப்பாரு,ஆட்டுமலை, குலிப்பட்டி,குருமலை,மாவடப்பு, தளிஞ்சி,தளிஞ்சிவயல், கருமுட்டி உள்ளிட்ட குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.இவர்களுக்குக்கான அடிப்படை அத்தியாவசிய தேவைகள் அவ்வப்போது வனத்துறை மற்றும் வருவாய் துறை சார்பில் செய்து தரப்படுகிறது. ஆனால் கல்வி,பாதை,சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் இன்றளவும் முழுமை பெறவில்லை. இதனால் அவசர கால உதவிகளை பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று குருமலையைச்…
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்! நேரில் பங்கேற்று, மனுக்களை பெற்ற மாநகர காவல் ஆணையர்!
திருநெல்வேலி,நவ.20:- தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் [DGP] உத்தரவுப்படி, மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில், அந்தந்த மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களில், நடைபெற்று வருகிறது. அதன்படி, பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், இன்று [நவ.20] மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், மொத்தம் 12 பேர் கலந்து கொண்டு, மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனாவிடம், புகார் மனுக்களை அளித்தனர். புகார்…
வாணியம்பாடி அருகே தலைகவசம் அணிந்துவரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் பூ கொடுத்து வாழ்த்தி அனுப்பினர்.
வாணியம்பாடி,நவ.20- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்பாகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா ஆகியோர் உத்தரவின் பேரில் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பண்ணூர் கூட்டு சாலையில் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் விஜய்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் வெங்கட் ராகவன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஞானதி ஆகியோர் தலைமையில் அதிகாரிகள்வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தலை கவசம் இல்லாமல் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்தவர்கள், எதிர் திசையில் வாகனங்களை ஓட்டி வந்தவர்கள்,…
