தமிழ்நாடு
உடுமலையில் கனமழைகுடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர்.
அக்டோபர் : 22 – உடுமலையில் இன்று இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டினம் கே சி பி நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் பயன்படுத்தாமல் உள்ள காலியிடங்களில் மழை நீர் தேங்கி தவளை கள் மற்றும் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. தவளைகள் சத்தத்தால் குடியிருப்போர் மிகவும் அவதிப்பட்டனர். இதேபோல் விவசாய நிலங்களிலும் மழை நீர் தேங்கி நின்றது….
காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் உணவு திருவிழா.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் , காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தமிழரின் விருந்தோம்பல் பண்பை தெரிந்து கொள்வதற்கும், நம் பாரம்பரிய பண்பாட்டின் உணவு கலாச்சாரத்தின் பயன்களை அறிந்து கொள்வதற்கும், இன்று 22.10.2024 உணவு திருவிழா நடைபெற்றது. இதில், பெரும்பாலும் நெருப்பை பயன்படுத்தாமல் நெருப்பில்லா சமையல் என்ற தலைப்பில் சமூக அறிவியல் மன்றம் சார்பில் விழா நடைபெற்றது. முன்னதாக பள்ளியின் ஆசிரியர் சையது முகமது குலாம்தஸ்தகீர் வரவேற்புரை…
அனைத்து மாற்றுத்திறனாளி நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக கவன ஈர்ப்பு போராட்டம் பழனியில் நடை பெற்றது…
பழனி : அக்டோபர் 21 – திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 2022ல் தமிழக அரசால் 39 பேருக்கு இலவச பட்டா மனை வழங்கப்பட்டது. பட்டா வழங்கியதில் 14 நபருக்கு இடத்தை பிரித்து வழங்கப்பட்டது. அதிலும் குளறுபடிகள் இதுவரை பட்டா வழங்கிய நபர்களுக்கு இடம் வழங்கப்படவில்லை. கடந்த அக்டோபர் 07 ம் அன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் ஆட்சியரிடம் புகார் மனு வழங்கியுள்ளனர். புகார் மனுவில் குறிப்பிட்டிருப்பது.திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் பழனி வட்டம் கோதை மங்கலம்…
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திண்டுக்கல்லில் அபிராமி அம்மன் திருக்கோவிலில் 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த ஏராளமான ஜோடிகள் இலவச திருமணத்திற்கு அபிராமி அம்மன் கோவிலில் விண்ணப்பித்திருந்தனர் இதில் 14 ஜோடிகளில் பரிசீலிக்கப்பட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் படி இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரின் வழிகாட்டுதலில்இலவச தங்கத் தாலி உள்பட பல்வேறு வகையான சீர்வரிசைகள் வழங்கி ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு உணவளித்து திருமணம் கொலாளமாக நடைபெற்றது. திண்டுக்கல் நகரின் மத்தியில் பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் திருத்தலம் உள்ளது இந்த திருத்தலம் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில்…
தென்காசியில் வாரிசாக ஏற்க மறுத்த இரண்டாவது திருமணம் செய்த தந்தையை கொலை செய்த வழக்கில் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..
தென்காசி அக்டோபர் – 21 -தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த டேவிட் என்பவரின் தந்தையான சண்முகையா என்பவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டேவிட் என்பவர் தன்னை வாரிசாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என சண்முகையாவிடம் வலியுறுத்தியுள்ளார். இதற்கு அவர் மறுத்ததால் தனது தந்தையை கொலை செய்த குற்றத்திற்கு இறந்து போன சண்முகாவின் மனைவி மாரியம்மாள் என்பவர் கடந்த 2016ம் ஆண்டு கொடுத்த புகார் மனு விசாரிக்கப்பட்டு…
புழல் பகுதியில் ரியல் எஸ்டேட் அலுவலக திறப்பு விழா
பெருநகர சென்னை மாநகராட்சி, புழல் லட்சுமி அம்மன் கோயில் தெருவில் முனிஸ்வரர் ரீயல் எஸ்டேட் அலுவலகத்தின் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. 24வது வட்ட துணைச்செயலாளர் அந்தோணி அவர்களின் ஏற்பாட்டில் 24வது வட்ட திமுக செயலாளர் புழல் சுந்தரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அகிலா அந்தோணி, சிஜெ ரவி, குணாநீதி, நாகராஜன், கேபிஎஸ் அன்பரசு, மற்றும் பலர் உடனிருந்தனர்.
வாணியம்பாடியில் நகைக்கடை உரிமையாளர் கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை.
வாணியம்பாடி,அக்.21- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மிட்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நகைக்கடை அதிபர் தினகரன் (47). இவருக்கு கோமதி என்ற மனைவியும், இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இவர் வாணியம்பாடி சி.எல் சாலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக லட்சுமி ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் இவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அதிகமாக கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.இவருக்கு கடன் சுமை அதிகமானதால் ஏற்கனவே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மனமுடைந்து தற்கொலைக்கு…
திருப்பத்தூர் அருகே பேக்கரி கடையில் மைக்ரோவேவ் ஓவனில் மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழப்பு.
வாணியம்பாடி, அக்.20- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன கடை தெருவில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (28)என்பவர் சொந்தமாக நீல்கிரீஸ் பேக்கரி கடையை நடத்தி வருகிறார். இந்த பேக்கரி கடையில் திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சேகர் வயது (32) என்பவர் கடந்த ஆறு மாதமாக வேலை செய்து வருகிறார் இந்த நிலையில் இன்று மைக்ரோவேவ் ஓவனிலிருந்து பப்ஸ் எடுக்கும்போது திடீரென மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் இவரை…
திண்டுக்கல்லில், யுனிமணி பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் திறப்பு விழா.
திண்டுக்கல்லில்,யுனிமணி பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட்டின் 312 வது கிளையை இந்தியாவின் யுனிமணி இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் கிருஷ்ணன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் 63 வது மற்றும் இந்தியாவில்312 வது கிளையை திறப்பது எங்களுக்கு பெருமையான தருணம்.இந்தியா முழுவதும் உள்ள சமூகங்களுக்கு நிதி சேவைகளை இன்னும் அணுகக் கூடியதாக மாற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. திண்டுக்கல் அதன் துடிப்பான கலாச்சாரம், மற்றும் செழிப்பான பொருளாதாரத்திற்கு பெயர் பெற்றது.மேலும்…
கொலை மிரட்டல் பழனியில் அகில இந்திய பார்வர்டுபிளாக் கட்சியினர் பரபரப்பு புகார்!
முன்னாள் எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்யக்கோரி பழனி துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு. திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக ஆண்டிச்சாமி என்ற ராஜேஷ் பொறுப்பு வகித்து வருகிறார். முன்னதாக இவர் பழனி காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார் ,அதில் கூறியிருப்பதாவது .. அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொறுப்பாளர் திருப்பூர் கர்ணன் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து…
