தமிழ்நாடு
ஊரக வளர்ச்சித் துறையின் அமைச்சருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அரசு அதிகாரிகள்!
திண்டுக்கல் மாவட்டம் பொன்னிமாந்துரை புதுப்பட்டி செல்லும் வழியில் அசீஸ் நகர் அருகில் உள்ள மூங்கில் குளம் அதிக துர்நாற்றம் வீசப்படுவதால் அப்பகுதியில் உள்ள புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் அருகில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளதால் நோய் தொற்று அபாயமும் அருகில் வசிக்க முடியாத அவல நிலை உருவாகியுள்ளது. இந்த குளத்தில் தோல் கழிவு நீரும் கலந்து நீர் இக்குளத்தில் இருந்து வெளியேறி குடகுனார் ஆற்றில் கலக்கப்பட்டு அழகாபுரி நீர்த்தேக்கத்திற்கு செல்கிறது. இந்த நீர்…
தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மகளிர் ஊர் நல அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்ககூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்லில் ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மற்றும் மகளிர் ஊர் நல அலுவலர்கள் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் திமுக தேர்தல் வாக்குறுதி எண் 309ன் படி பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கிட வலியுறுத்தி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தலைவர் சங்கர் பாபு ஆலோசனை நடத்தினார் தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு உடனே பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூட்டத்தில் பேசினார். திமுக அரசு மு க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி…
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கழக பவள விழா.
திண்டுக்கல் கல்லறை மேடு அருகில் பழனி சட்டமன்ற உறுப்பினர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி .செந்தில்குமார் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கழக பவள விழாவை முன்னிட்டு கழக கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.உடன் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் காமாட்சி, நாகராஜன், மார்கிரேட்மேரி பிலால்உசேன், , மாநகர கழக செயலாளர் திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் .ராஜப்பா, திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், பகுதி…
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் சார்பாக இலவச மணமாலை நிகழ்ச்சி.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிஎஸ்என்ஏ மஹாலில் மத்திய மண்டலம் ஏற்பாடு செய்துள்ள அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் இலவச மணமாலை விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் பிள்ளை பொதுச்செயலாளர் ரகுராம் பொருளாளர் ரவி முதலியார் மத்திய மண்டல துணைத் தலைவர் குழந்தைவேலு தலைமையில் நடைபெற்றது. அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் மத்திய மண்டல ஒருங்கிணைப்பாளர் களான அமைப்பாளர் வேலம்மாள் மகளிர் அணி தலைவி திலகவதி மாநில மகளிர் அணி செயலாளர் உமாவாசன்…
உடுமலையில் புகழ்பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் முருகனை சூரன் வதம் செய்யும் சூரசம்ஹகார விழா- ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து சிறப்பு வழிபாடு.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள புகழ் பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி தங்களால் முடிந்த வகையில் பால்பழம் அருந்தியும்,ஒரு வேளை உணவும்,குறுமிளகு எடுத்துக் கொண்டும் பயபக்தியோடு விரதம் மேற்கொண்டு வந்தனர்.இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா உடுமலை பிரசன்ன விநாயகர்கோவிலில் வாண வேடிக்கை, கைலாச வாத்தியம், மங்கள வாத்தியம் முழங்க கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக இன்று மதியம் மூன்று மணியளவில்…
திருச்செந்தூர் முருகனுக்கு மயில் மாலை குஜராத்திலிருந்து வந்ததாக பொய்யான தகவல் ஹரி நாடார் மனைவி மஞ்சு வேதனை.!
அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான இன்று சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர் கலந்து கொண்டனர். நடைபெற்ற நிகழ்ச்சியில் முருகனுக்கு மயில் இறகு மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது முருகனுக்கு அணிவிக்கப்பட்ட மயில் இறகு மாலையை பற்றி அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கந்த சஷ்டி திருவிழாவின் தொடக்கத்திலிருந்து கடந்த ஒரு வார காலமாக சஷ்டி விரதம் மேற்கொண்டு முக்கிய…
பழனியில் கந்தசஷ்டி விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் கந்தசஷ்டி விழா நேற்று மாலை 3 மணி அளவில் துவங்கியது. கந்தசஷ்டி விழாவின் ஆறாம் திருநாளான நேற்று முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் தொடக்கமாக மலைக்கோயில் சின்ன குமாரசுவாமி மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கி வந்து அசுரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி கோயில் நிர்வாகம் சார்பாக இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சூரசம்ஹார நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர்…
ஆம்பூர் அருகே வங்கியில் தந்தை வாங்கிய கடனுக்காக வீட்டை ஜப்தி செய்ய வந்த வங்கி அதிகாரிகள், காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் மகள் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.
வாணியம்பாடி,நவ.7- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கைலாசகிரி முருகன் கோயில் மலையடிவார பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பாலாஜி. இவருக்கு இரண்டு மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். முதல் மனைவிக்கு கவிதா என்ற மகளும், இரண்டாவது மனைவிக்கு நித்யா, சுகன்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் பாலாஜி கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு முன்பு ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் வீடு கட்ட 33 லட்சம் கடன் வாங்கி…
வாணியம்பாடியில் நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் மற்றும் 10க்கும் மேற்பட்டோர் அக் கட்சியில் இருந்து விலகுவதாக பேட்டி.
இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு 11500 வாக்குகளை பெற்று டெபாசிட்டை இழுந்தார். இவர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் 10க்கும் மேற்பட்டோர், கட்சியில் இருந்து விலகுவதாக, வாணியம்பாடி சி.எல் சாலையில் உள்ள கடை ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாம் தமிழர் கட்சியில் நம்பிக்கை தன்மை இழந்து விட்டதாகவும், கட்சி யாரிடம் கூட்டு வைக்கவில்லை…
நீதிமன்ற உத்தரவு என்ன ஆனது? பிளக்ஸ் பேனர் வைப்பதில் பழனி நகராட்சிக்கு காவல்துறை உதவியா?
பழனி நகராட்சியின் முக்கிய இடங்களில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் சார்பாகவும், அரசியல் கட்சிகள், தனியார் பள்ளிகள் சார்பாக விளம்பர பிளக்ஸ் பேனர்கள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மயில் ரவுண்டானா, திண்டுக்கலில் இருந்து பழனி பேருந்துநிலையம் வரும் பிரதான சாலை, டிராவல்ஸ் பங்களா , EB கார்னர் போன்ற பல முக்கிய இடங்களில் அதிகமான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. விளம்பர பேனர்களை வைப்பதற்கு நகராட்சி அலுவலகத்தில் அனுமதி பெறுவதற்கு என சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது….
