திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சிவசேனா சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள், விநாயகர் சிலை தயாரிப்பது மற்றும் வேல் யாத்திரை பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேசிய சிவசேனா பொறுப்பாளர்கள் மும்பை மற்றும் புனே போன்ற நகரங்களில் கொண்டாடப்படுவதைப் போல, தமிழகத்திலும் கணபதி விழா எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி, மக்கள் சுதந்திரமாகக் கொண்டாடும் வகையில் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அது மட்டுமின்றி காவல்துறை விதிக்கும் பாதுகாப்பு நடைமுறைகளை நாங்கள் ஏற்கத் தயாராக இருந்தாலும், அது வழிபாட்டிற்கும் விழாக்களுக்கும் தடையாக இருக்கக் கூடாது.
அதேபோல், தமிழர்களின் கடவுளான முருகப் பெருமானின் வழிபாட்டுடன் தொடர்புடைய வேல் யாத்திரைக்குக் காவல்துறை மறுப்புத் தெரிவிக்காமல் அனுமதி வழங்க வேண்டும். அவ்வாறு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தால் தடையை மீறியும் பழனியில் திட்டமிட்டபடி வேல் யாத்திரை நிச்சயம் நடைபெறும் என தெரிவித்தனர். மேலும் இந்தியாவில் காக்ரோச் ஜனதா பார்ட்டி போன்ற அரசியல் இல்லா இயக்கங்களை மக்கள் நம்பக் கூடாது எனவும் கூறினர்.
இந்நிகழ்வில் சிவ சேனா தேசிய ஒருங்கிணைப்பாளர் ராஜ்சிங் சந்தேல் ஜி, மாநிலத் தலைவர் மணி பாரதி, மாநில பொதுச்செயலாளர் கனி வளவன், மாநிலச் செயலாளர்கள் அமுதர்சன், திருப்பூர் ஆர் பி ரமேஷ் மற்றும் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இணை ஆசிரியர் : நா.ராஜாமணி – 89733 50663
