பழனியில் புண்ணிய நதியான சண்முகநதியை சீரமைக்க இளைஞர்கள் தீவிர தூய்மைப் பணி: 6 மாதங்களில் பழைய பொலிவுக்கு கொண்டுவர திட்டம்!
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் காவடி எடுக்கும் பக்தர்கள் புனித நீராடும் முதன்மை நதியாக சண்முகநதி விளங்கி வருகிறது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க புண்ணிய நதியை மீட்டெடுக்கும் நோக்கில், ‘We The Leaders’ அமைப்பின் சார்பில் தீவிர தூய்மைப் பணித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கனகராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், ஏராளமான இளைஞர்களும் தன்னார்வலர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு நதிக்கரையிலும் நீரிலும் தேங்கிக்கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள் மற்றும்…
