பழனியில் பிரபல ‘பாப்புலர் மெடிக்கல்ஸ்’ நிர்வாகத்தின் புதிய முயற்சியாக “ஓஜஸ் கஃபே எனும் புதிய உணவகம் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டுள்ளது. பழனி அரசு மருத்துவமனைக்கு எதிரில் அமைந்துள்ள இவ்வுணவகத்தின் திறப்பு விழாவில், சிறப்பு அழைப்பாளர்கள் திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் கார்த்திக் ராஜா, பழனி நகர செயலாளர் மிதுன் குமார் மற்றும் பழனி சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் பிரவீன் குமார் ஆகியோர் கலந்துகொண்டு உணவகத்தைத் திறந்து வைத்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பாப்புலர் மெடிக்கல்ஸ் மற்றும் ஓஜஸ் கஃபே உரிமையாளர் சுரேஷ் சிறப்பாகச் செய்திருந்தார். விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொன்னாடை போர்த்தி அன்போடு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இணை ஆசிரியர் : நா.ராஜாமணி – 8973350663
