கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சாலையோரத்தில் யாசகம் செய்து கொண்டு இருந்த ஒருவரை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் ‘நிமிர்’ மீட்புக் குழுவினர் ஒன்றிணைவோம் அறக்கட்டளை, நாம் ஒருவர் அறக்கட்டளை மற்றும் அவர் பவுண்டேஷன் இணைந்து மீட்டனர்.
சில ஆண்டுகளாக நாகர்கோவில் நகரில் சுற்றித் திரிந்து யாசகம் செய்து வந்ததாகக் கூறப்படும் இவர் குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தனர்.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் IPS அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ‘நிமிர்’ குழுவைச் சேர்ந்த காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அந்த நபரை பாதுகாப்பாக மீட்டனர்.
மீட்கப்பட்ட நபரின் சொந்த ஊர் மற்றும் குடும்ப விவரங்கள் இதுவரை தெரியவில்லை. அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய பாதுகாப்புடன் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார்.
சமூக பொறுப்புணர்வுடன் செய்யப்பட்ட இந்த நடவடிக்கைக்கு பாராட்டு குவிந்தது.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
