Headlines

ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் சமூக வலைதளங்களில் பெண்களின் பாதுகாப்பு (ம) பெண்களின் சுகாதார பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் சமூக வலைதளங்களில் பெண்களின் பாதுகாப்பு (ம) பெண்களின் சுகாதார பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆலங்குளம்: பிப்-12

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் சமூக வலைதளங்களில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களின் சுகாதார பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி தலைவர் பொறியாளர் ஜீசஸ் ராஜா அவர்களின் வழிகாட்டுதலின்படி கல்லூரி அரங்கத்தில் வைத்து மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். கல்லூரியின் நிர்வாக இயக்குனர் பேராசிரியர் கனக பாண்டியன் முன்னிலை வகித்தார்.இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல்துறை உதவி ஆய்வாளர் ரத்னா பால் சாந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் கணினி அறிவியல் துறையில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி கலைராணி வரவேற்புரை ஆற்றினார்.நிகழ்ச்சியின் துவக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே துவங்கியது.தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் நிர்வாக இயக்குனர் சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் இணைந்து தமிழகத்தின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் வலியுறுத்தும் விதமாக அனைவரும் இணைந்து குத்து விளக்கு ஏற்றினர்.தொடர்ந்து மூன்றாம் ஆண்டு பயிலும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவியல் துறை மாணவி பாத்திமா பர்வீன் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து விளக்கி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய கல்லூரி முதல்வர் மாணவியரின் பாதுகாப்பு மற்றும் ஒழுக்க நெறி பற்றிய விழிப்புணர்வு கல்வியுடன் இணைந்து செல்ல வேண்டியது அவசியம் என வலியுறுத்தினர்.

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *