Headlines

கோவை மாநகராட்சி 80-வது வார்டில் 4 ஆண்டுகால சாதனை கூட்டம்.

கோவை மாநகராட்சி 80-வது வார்டில் 4 ஆண்டுகால சாதனை கூட்டம்.

கோவை மாநகராட்சி 80-வது வார்டில் 4 ஆண்டுகால சாதனை பயணம்! – பகுதி சபா கூட்டத்தில் பட்டியலிட்ட பொது சுகாதார குழு தலைவர்!

​கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், 80-வது வார்டுக்கு உட்பட்ட செட்டி வீதி மற்றும் கொங்கு மஹாலில் பகுதி சபா கூட்டம் 07-02-2026 மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. 80-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், பொது சுகாதார குழு தலைவருமான திரு. பெ.மாரிசெல்வன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளில் வார்டில் செய்யப்பட்ட பிரம்மாண்ட வளர்ச்சிப் பணிகள் பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

​கடந்த 4 ஆண்டுகளில் நாம் முடித்துக்காட்டிய சாதனைத் துளிகள்:

​சாலை வசதிகள்: சுமார் ₹7 கோடியே 1 லட்சம் மதிப்பீட்டில் 66 தார் சாலைகள் மற்றும் பழுதடைந்த சாலைகள் சீரமைப்பு.

கல்வி: எதிர்கால சந்ததியினருக்காக ₹2 கோடியே 1 லட்சம் மதிப்பீட்டில் 8 பள்ளி கட்டிடங்கள்.

சுகாதாரம்: ₹50 லட்சம் மதிப்பீட்டில் 3 சுகாதாரக் கட்டிடங்கள்

குடிநீர் & வடிகால்: தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க ₹70 லட்சத்தில் 7 போர்வெல், ₹87.60 லட்சத்தில் 9 சாக்கடை வசதிகள், மற்றும் ₹20 லட்சத்தில் 3 பாதாளச் சாக்கடைப் பணிகள்.

பொது வசதிகள்: ₹24.50 லட்சம் மதிப்பீட்டில் 2 பூங்காக்கள் மேம்பாடு, அங்கன்வாடி மையம் மற்றும் சமுதாய கூடம்.

₹96 லட்சம் மதிப்பீட்டில் பிரம்மாண்ட பள்ளி கட்டிடம்.

₹45 லட்சம் மதிப்பீட்டில் 4 இடங்களில் வடிகால் வசதிகள்.

₹30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பொதுக் கழிப்பிடம், என்று வார்டில் நிறைவேற்ற பட்ட வளர்ச்சி பணிகள் சாலைகள் முதல் பள்ளிகள் வரை குடிநீர் முதல் சுகாதாரம் வரை அனைத்து துறைகளிலும் நம் 80வது வார்டு முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது இவை அனைத்தும் உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமானது என்று தொடர்ந்து பயணிப்போம் நம் வார்டை கோவை மாநகராட்சி சிறந்த வார்டாக மாற்றுவோம் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை மீண்டும் ஆட்சியில் அமர வைப்போம் “ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்” என்று பேசினார்.

பிறகு பகுதி சபா கூட்டத்தில் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது உடனடியாகத் தீர்வு காண அதிகாரிகளுக்கு பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் உத்தரவிட்டார்.

​இந்நிகழ்வில் மாநகராட்சி உதவி இளம் பொறியாளர் நாகேந்திரன், மாநில தீர்மானம் குழு இணை செயலாளர் பா.நாச்சிமுத்து, பகுதி பொறுப்பாளர் முருகேசன், வார்டு செயலாளர் நா.தங்கவேலன், வட்ட கழக பொறுப்பாளர் ராஜேஷ் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் : சம்பத்குமார்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *