மறவன்குடியிருப்பு பகுதியில் உள்ள புனித தஸ்நேவிஸ் மாதா தேவாலய பங்கு பேரவையில் பல கோடி ரூபாய் நிதி மற்றும் சொத்து முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, ஊர் மக்கள் மற்றும் பக்தர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பக்தர்கள் வழங்கிய நன்கொடைத் தொகைகள் மற்றும் சொத்துக்கள் பங்கு பேரவையின் அதிகாரப்பூர்வ கணக்கில் சேர்க்கப்படாமல், தனியாக தொடங்கப்பட்ட டிரஸ்ட் மூலம் வரவு வைக்கப்பட்டு முறைகேடு செய்யப்பட்டதாக நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் திரண்டதால், அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், ஆயர் இல்லம் மூலம் கணக்கு விவரம் கேட்ட போதும் வழங்கப்படவில்லை என்றும், பொதுமக்களின் சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை என்றும் வலியுறுத்தினர்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
