விளவங்கோடு தொகுதியின் வேட்பாளராக முன்னாள் சபை செயலாளர் டி.டி.பிரவீன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தொடர்புடைய வழக்கொன்று குறித்த தகவல்கள் தற்போது தேர்தல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
திருவனந்தபுரம் காரக்கோணம் டாக்டர்.சோமர்வெல் மெமோரியல் சி.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி 28 மாணவர்களின் பெற்றோர்களிடம் சுமார் ரூ.7.22 கோடி பணம் பெறப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் முன்னாள் பிஷப் தர்மராஜ் ரசாலம் உள்ளிட்டோருடன் டி.டி.பிரவீன் பெயரையும் இணைத்து, கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தாலும், இவ்வழக்கு இன்னும் நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், அவர் மீதான நிதி மோசடிக் குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாத சூழலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன் மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
