Headlines

காங்கிரஸ் கட்சிக்கு பூத் கமிட்டி போடக்கூட ஆளில்லை: மதுரை திமுக எம்எல்ஏ தளபதி விமர்சனம்.

காங்கிரஸ் கட்சிக்கு பூத் கமிட்டி போடக்கூட ஆளில்லை: மதுரை திமுக எம்எல்ஏ தளபதி விமர்சனம்

மதுரையில் நடந்த நிகழ்ச்சியில், திமுக வடக்கு எம்எல்ஏ கோ.தளபதி பேசியதாவது:

“காங்கிரஸ் நண்பர்கள் ஒரு சில பேர் இருக்கிறார்கள். மாணிக்கம் தாகூர், ஜோதிமணி இருக்கிறார்கள். அவர்கள் எம்பி ஆகிவிட்டார்கள். இனி வருபவர்கள் எம்எல்ஏ ஆனா என்ன? ஆகவில்லை என்றால் எனச் சொல்லி, அதில் பங்கு வேண்டும்? இதில் பங்கு வேண்டும் என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் தலைமை புரிந்து, அடுத்து இவர்களுக்கு சீட் கொடுக்கக் கூடாது. நம்ம கொடுக்க விடக்கூடாது.

எதற்காக இதை சொல்கிறேன் என்றால், நம்ம உணர்வோடு, நம்ம இல்லை என்றால் இண்டியா கூட்டணியே கிடையாது. டில்லியில் கூட்டணி நிற்பதற்கு காரணம், ஒன்று ஸ்டாலின், இரண்டு மம்தா பானர்ஜி, மூன்று அகிலேஷ் யாதவ். இந்த மூன்று பேர் தான் முதன்மையாக இருந்து இண்டியா கூட்டணியை காப்பாற்றி கொண்டு இருக்கிறோம்.

ஆனால் இந்த காங்கிரசுக்கு, சொன்னா தப்பாக போய்விடும். மூன்றாயிரம், நான்காயிரம் ஓட்டு மட்டும்தான் இருக்கிறது. ஆள் கிடையாது. வார்டில் பூத் கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி அது அந்த அளவுக்கு இன்றைக்கு பேசுகிறார்கள் என்றால் மனதுக்கு வேதனையாக இருக்கிறது.” இவ்வாறு திமுக எம்எல்ஏ கோ. தளபதி பேசினார்.

மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *