Headlines

அரசு பள்ளிகளில் அறிவியல் “விழிப்புணர்வு” நிகழ்ச்சிகள்…

அரசு பள்ளிகளில் அறிவியல் "விழிப்புணர்வு" நிகழ்ச்சிகள்...

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே அறிவியல் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி,மஞ்சக்கம்பை அரசு உயர்நிலைப்பள்ளி, அரவேணு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் அறிவியல் விழிப்புணர்ச்சி கருத்தரங்குகள் நடத்தப்பட்டது.

அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு.கே. ஜே. ராஜு அவர்கள் மாணவர்களிடையே பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் …..

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் மின்னணு கழிவுகள் 73% அதிகரித்துள்ளது. அதுபோல துணி கழிவுகள் 41% அதிகரித்துள்ளது.

2050 ஆம் ஆண்டில் கடலில் மீன்களின் எண்ணிக்கை விட பிளாஸ்டிக் பொருட்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என ஒரு ஆய்வு கூறுகிறது.

ஒவ்வொரு பள்ளியிலும் திடக்கழிவுகள் மேலாண்மை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பூஜ்ஜிய திடக்கழிவு என்ற திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.

நமது உடல் நமது அல்ல. நமக்குள் இருக்கும் கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் தான் நமது உடல் நலத்தை நிர்ணயிப்பவை.

நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள் பழங்கள் போன்ற உணவு தான் பாக்டீரியாக்களுக்கு பிடித்தமானவை அத்தகைய உணவுகள் தான் பாக்டீரியாக்கள் நமது உடலை நலமாக வைத்துக் கொள்ள உதவும்.

நவீன துரித உணவு வகைகள் பொட்டலங்களில் வரும் உணவுப் பொருட்கள் நன்மை தரும் பாக்டீரியாக்களின் செயல்பாடுகளை சீரழிக்கிறது.

இதனால் ஓபிசிட்டி போன்ற பல உடல் நல சிக்கல்கள் உருவாகின்றன. நமக்கு நன்மை தரும் பாக்டீரியாக்களை நாம் மதிக்கும் போது அது நம்மை நலமாக வைத்துக் கொள்ளும் என்பன போன்ற பல அறிவியல் செய்திகள் மாணவர்களுக்கு கூறப்பட்டது.

மேலும் வானியல் குறித்த படக் காட்சிகள் மூலம் மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் தலைமை ஆசிரியர்கள் திருமதி.டாப் நீ மார்கரெட், திரு. ராஜு திருமதி. லலிதா ஆகியோர் தலைமை வகித்தனர்.

பள்ளி அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *