Headlines

டிஜிட்டல் பரிவர்த்தனையைப் புறக்கணித்த ‘SK பியூல்’ சிஎன்ஜி பெட்ரோல் பங்க்: திண்டுக்கல்லில் வாகன ஓட்டிகள் கடும் அவதி!

டிஜிட்டல் பரிவர்த்தனையைப் புறக்கணித்த ‘SK பியூல்’ சிஎன்ஜி பெட்ரோல் பங்க்: திண்டுக்கல்லில் வாகன ஓட்டிகள் கடும் அவதி!

​திண்டுக்கல்:
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் கூகுள் பே (Google Pay), போன் பே (PhonePe) போன்ற யுபிஐ (UPI) டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.

பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களுக்குப் பெரும் பயனுள்ளதாக இருக்கும் இத்தகைய டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறையை, திண்டுக்கல்லில் உள்ள ‘SK பியூல்’ (SK Fuel) சிஎன்ஜி பெட்ரோல் பங்க் நிர்வாகம் முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளது.

பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


​பங்க் மேனேஜருடன் வாக்குவாதம்:
இந்த பெட்ரோல் பங்க்கில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஏற்க மறுத்து, ரொக்கப் பணம் (Cash) மட்டுமே தர வேண்டும் என ஊழியர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இதனால் எரிபொருள் நிரப்ப வந்த வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

இது குறித்து கேள்வி எழுப்பிய வாடிக்கையாளர்களிடம், பங்க் மேனேஜர் சக்திவேல் என்பவர் முறையான பதிலளிக்காமல் மறுத்ததால், அவருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

​மூடப்படும் நிலையில் பங்க் – சிஎன்ஜி தட்டுப்பாடு அபாயம்:
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளொன்றுக்கு சுமார் 7,000-க்கும் மேற்பட்ட வாடகை ஆட்டோக்கள், தனியார் கார்கள், வாடகை கார்கள் மற்றும் வணிக ரீதியிலான கனரக வாகனங்கள் இந்த ‘SK பியூல்’ பங்க் மூலமாகவே சிஎன்ஜி (CNG) எரிபொருள் நிரப்பி வருகின்றன.

​தற்போது இந்த பங்க் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், திண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான சிஎன்ஜி தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

​மாற்று ஏற்பாடு இன்றி தவிக்கும் வாகன ஓட்டிகள்:
திண்டுக்கல்லில் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டால், அடுத்தபடியாக மணப்பாறை அல்லது வாடிப்பட்டி ஆகிய பகுதிகளுக்குச் சென்றே சிஎன்ஜி நிரப்ப வேண்டிய அவல நிலை உள்ளது.

இது வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் அலைச்சலையும், பெரும் நஷ்டத்தையும் ஏற்படுத்தும் என்பதால், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *