Headlines

தவெக தலைவர் விஜய்: “தனியாக நின்றே தேர்தல்… யாருடனும் கூட்டணி இல்லை” ..

தவெக தலைவர் விஜய்: “தனியாக நின்றே தேர்தல்… யாருடனும் கூட்டணி இல்லை” ..

சென்னை:
“நட்பு சக்தி இருந்தாலும், இல்லையென்றாலும் தனியாக நின்று ஜெயிக்கும் படை நமது படை” என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

அதிமுக நேரடியாக பாஜகவிடம் சரணடைந்ததாகவும், திமுக மறைமுகமாக பாஜகவிடம் சரணடைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக யாருடனும் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்றும், எந்த கூட்டணியிலும் சேரப் போவதும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும், தங்களுடனும் எந்தக் கட்சியும் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்றும், தேர்தலை முழுமையாக தனியாகவே சந்திக்கப் போவதாகவும் தொண்டர்களிடம் அறிவித்தார்.

“எங்கள் பலம் மக்கள். எங்கள் பாதை தனிப்பாதை” என கூறி, கட்சியின் தனித்துவ அரசியல் பயணத்தை அவர் வலியுறுத்தினார்.

தமிழக விடியல்
குமரி மாவட்ட தலைமை நிருபர்: பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *