Headlines

ஆம்பூர் அருகே பன்றிகள் வளர்க்கும் பண்ணையில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு.

ஆம்பூர் அருகே பன்றிகள் வளர்க்கும் பண்ணையில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு.

வாணியம்பாடி, ஏப்.23- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (28). இவர் அதே பகுதியில் பாப்பையன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இரும்பு செட் அமைத்து கடந்த இரண்டு வருடங்களாக பன்றிகள் வளர்க்கபட்டு பெங்களூருக்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று பண்ணையில் கம்பி வேலி (மெஷ) அமைத்துக் கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் அருகில் பன்றிகளுக்கு உணவு சமைத்துக் கொண்டிருந்த அண்டாவில் கொதிக்கும் உணவில் விழுந்த வெங்கடேசன் படுகாயமடைந்து பலத்த தீக்காயங்களுடன் சோலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கிராமிய போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நிருபர் அப்சர் மார்வான்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *