வாணியம்பாடி, ஏப்.16- திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 37 மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
அப்சர் மர்வான் திருப்பத்தூர் மாவட்ட நிருபர்.
