ஆம்பூர் அருகே குடும்பத்தகராறில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவர் கைது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உடைய ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த சத்யராஜ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுமதி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு இடையே அவ்வப்போது தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று உடைய ராஜபாளையம் பகுதியில் அம்மன் கோவில் திருவிழா நடைபெற்ற நிலையில், வீட்டிலிருந்த அனைவரும் கோவிலுக்கு சென்றிருந்த போது, சுமதி மற்றும் அவரது கணவர் சத்யராஜ் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த…
